ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியேறிய 8 எம்எல்ஏ.க்கள் பாஜக-வில் இணைந்தனர்

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் வந்தனா கவுர், ரோஹித், கிரிஷ் சோனி, மதன் லால், ராஜேஷ் ரிஷி, பி.எஸ்.ஜுன், நரேஷ் யாதவ், பவன் சர்மா ஆகிய 8 எம்எல்.ஏ-க்களுக்கு டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதனால் அதிருப்தியில் இருந்த 8 பேரும் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். ஆம் ஆத்மி ஊழலில் ஈடுபடுவதால் கட்சியிலிருந்து விலகுவதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த 8 பேரும் நேற்று பாஜகவில் இணைந்தனர்.

இதுகுறித்து, டெல்லி பாஜக பொறுப்பாளர் வைஜெயந்த் பாண்டா கூறும்போது, ‘‘இது வரலாற்று சிறப்பு மிக்க நாள். 8 பேரும் ஆம் ஆத்மி என்ற துயரத்தில் இருந்து விலகியுள்ளனர். நாளை மறுநாள் டெல்லியும் துயரத்தில் இருந்து விலகும்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.