இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சமீப நாட்களாக சிறப்பாக விளையாடி வந்தார். பங்களாதேஷ் மற்றும் தென்னாபிரிக்கா டி20 தொடர்களில் ஓப்பனராக களமிறங்கி நல்ல ரன்கள் அடித்திருந்தார். இதனால் இங்கிலாந்து தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகளிலும் ஒரே மாதிரி அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ஐந்து டி20 போட்டிகளில் சேர்த்து மொத்தமாக 35 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார் சஞ்சு சாம்சன். இந்த தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இருந்தாலும் சஞ்சு சாம்சன் பார்ம் ஏமாற்றம் அளித்துள்ளது.
மேலும் படிங்க: பும்ரா சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா? அஜித் அகர்கர் சொல்வது என்ன?
சஞ்சு சாம்சன் காயம்
வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆரம்பித்தார். ஆனால் இரண்டாவது ஓவரில் மார்க் வுட் பந்தில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவ உதவிகள் மேற்கொள்ளப்பட்டாலும் பீல்டிங்கில் சஞ்சு சாம்சன் வரவில்லை. அவருக்கு பதிலாக துருவ் ஜூரேல் விக்கெட் கீப்பிங் செய்தார். இந்நிலையில் சஞ்சு சாம்சன் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்ல உள்ளார் என்றும், ஐந்து முதல் ஆறு வாரங்கள் வரை அங்கு அவருக்கு மருத்துவ உதவிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. “சஞ்சு சாம்சனுக்கு வலது ஆல்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. எனவே அவர் சிறிது நாட்களுக்கு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வில் இருப்பார். ஐந்து முதல் ஆறு வாரங்களுக்கு பிறகு அவருடைய காயம் குறித்து தெளிவான தகவல் தெரியும்” என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sanju Samson likely to be out of cricket action for 6 weeks after the ball hit on the gloves during the first over of the 5th T20I. [Asianet News]
– With the pain, he continued to bat in the final T20I, waiting for a strong comeback during IPL pic.twitter.com/TCqzop1l2v
— Johns. (@CricCrazyJohns) February 3, 2025
ரஞ்சி போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாட முடியாது
டி20 தொடர் முடிந்த பிறகு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை. இதனால் அவர் கேரளா அணிக்காக ரஞ்சிக்கோப்பையில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான ரஞ்சிக்கோப்பை கால் இறுதியில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. இந்த தொடர் வரும் பிப்ரவரி 8 தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஐபிஎல் விளையாடுவாரா சஞ்சு சாம்சன்?
ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாதம் தொடங்க உள்ள நிலையில் சஞ்சு சாம்சன் அதற்குள் குணமாகி விடுவார் என்று கூறப்படுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் சஞ்சு சாம்சன் அணியின் முக்கிய வீரராக உள்ளார். ஒருவேளை அவரது காயம் குணமாகவில்லை என்றால் அது ராஜஸ்தான் அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும். மார்ச் 24ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் அதற்குள் சஞ்சு சாம்சனின் காயம் குணமடையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
மேலும் படிங்க: JOHN CENA | கடைசி ராயல் ரம்பல் மேட்சில் ஜான் சீனா அதிர்ச்சி தோல்வி… WWE ரசிகர்கள் ஷாக்