கடந்த 2008 ஆம் ஆண்டு இந்திய சந்தையில் 150cc பிரிவில் வெளியான முதல் லிக்யூடூ கூல்டூ எஞ்சின் பெற்ற யமஹா R15 மாடல் தொடர்ந்து ஃபேரிங் ஸ்டைல் பெற்ற ஸ்போர்ட்டிவ் பைக் சந்தையில் மிக முக்கியமான மாடலாக விளங்குகிறது. சர்ஜாப்பூர் ஆலையில் தயாரிக்கப்டுகின்ற யமஹாவின் ஆர்15 பைக்கின் உற்பத்தி இலக்கு 10 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட 90 % ஆர்15 பைக்குகள் இந்தியாவிலே விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பேசிய இந்தியா […]