கோலியை அவுட்டாக்க பஸ் டிரைவர் ஐடியா கொடுத்தாரா? ரஞ்சி பவுலர் சங்வான் பகிரும் சுவாரஸ்யம்!

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தனது ஃபார்மை மீட்டெடுக்க ரஞ்சி கிரிக்கெட்டிக்கு 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு திரும்பி உள்ளார். இந்நிலையில், ரயில்வே அணிக்கு எதிரன போட்டியில் அவர் வெறும் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ரயில்வே அணியின் பந்து வீச்சாளர் சங்வானின் அபார பந்து வீச்சில் விராட் கோலி போல்ட் ஆனார். 

விராட் கோலியின் வருகையால் ரஞ்சி போட்டியை பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் டெல்லி மைதானத்திற்கு வந்திருந்தனர். விராட் கோலி ஆட்டமிழந்தது அவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் பந்து வீச்சாளர் சங்வானின் பந்து வீச்சை பாராட்டினர். 

ஹிமான்சு சங்வான் பகிர்ந்தவை 

இந்த நிலையில், ரயில்வே அணியின் பந்து வீச்சாளர் ஹிமான்சு சங்வான், விராட் கோலியின் விக்கெட் எடுத்தது குறித்து சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர், இந்த போட்டிக்கு முன்பு டெல்லி அணியில் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் விளையாடுகிறார்கள் என தெரியவந்தது. இந்தப் போட்டி நேரலை செய்யப்படுமா என்பது எங்களுக்கு தெரியாது. 

மேலும் படிங்க: இந்த 2 டீம்தான் பைனலுக்கு வரும்.. அடித்து சொல்லும் ஜாம்பவான்கள்!

அதன் பிறகு பண்ட் இந்த போட்டியில் விளையாட போவது இல்லை, விராட் கோலி மட்டும் இந்த போட்டியில் பங்கேற்பார் என தெரிந்தது. இதற்காக இந்தப் போட்டி நேரலை செய்யப்படும் என எங்களுக்கு தகவல் கிடைத்தது. எங்கள் ரயில்வே அணியின் நான் தான் முதன்மை பந்து வீச்சாளர். அதனால் நான் கண்டிப்பாக விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்துவேன் என எங்கள் அணியில் ஒவ்வொரு வீரரும் நம்பிக்கை கொடுத்தார்கள். 

பஸ் டிரைவர் கொடுத்த ஐடியா

நாங்கள் செல்லும் பேருந்து ஓட்டுனர் கூட விராட் கோலிக்கு நான்காவது அல்லது ஐந்தாவது ஸ்டெம்ப் லைனில் பந்து வீச்சுங்கள் அவர் நிச்சயம் ஆட்டம் இழந்து விடுவார் என கூறினார். ஆனால் நான் அவரது பலவீனத்தில் கவனம் செலுத்தவில்லை. என்னுடைய பலத்தை நான் நம்பினேன்.  

அதேபோல் என்னுடைய பலத்திற்கு தகுந்தாற்போல் நான் பந்து வீசி விராட் கோலி விக்கெட்டை வீழ்த்தினேன். உண்மையில் விராட் கோலிக்கு எதிராக எந்த ஒரு திட்டத்தையும் தீட்டவில்லை. எங்கள் பயிற்சியாளரும் டெல்லி அணி அதிரடியாக விளையாட தான் விரும்புவார்கள். எனவே நீங்கள் கட்டுக்கோப்பாக ஒரே மாதிரி பந்து வீசுங்கள் என்ற ஐடியா மட்டும் கொடுத்தார். 

இன்னிங்ஸ் முடிந்தவுடன் நாங்கள் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு சென்றோம். அப்போது விராட் கோலி அங்கு நின்று கொண்டிருந்தார். உடனே என்னை பார்த்து விராட் கோலி நன்றாக பந்து வீசினேர்கள் என கைகொடுத்தார். இதையடுத்து நான் உங்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ளலாமா? என்று கேட்டேன். பின்னர் விக்கெட் எடுத்த பந்துடன் நான்ஆவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அப்போது இது என்னை அவுட் ஆக்கிய பந்து தான என நகைச்சுவையாக கேட்டு சிரித்தார் எனக் கூறினார். 

வாழ்க்கையே மாறியதாக உணர்கிறேன்

தொடர்ந்து பேசிய சங்வான், இந்த போட்டி முடிந்த பின்னர் எனது வாழ்க்கையே மாறியதாக நினைத்தேன். எனது மொபைலுக்கு நிறைய போன் கால்கள் வந்திருந்தது. இன்ஸ்டாகிராமிலும் வெறும் 700 பேர் மட்டுமே என்னை பிந்தொடர்ந்தனர். ஆனால் தற்போது அது ஆயிரக்கணக்காக மாறி உள்ளது என தெரிவித்தார்.  

மேலும் படிங்க: சேட்டனுக்கு ஏற்பட்ட சோகம்! சஞ்சு சாம்சன் ஐபிஎல்லில் விளையாடுவது சந்தேகம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.