ஆட்டோ எக்ஸ்போ 2025வின் ஹைலைட்டே மின்சார வாகனங்கள்தான். அதுவும் குறிப்பா சொல்லணும்னா, மின்சாரக் கார்கள்தான். இதோ இங்கே நாம் பார்ப்பதும் புத்தம் புதியBrand New மின்சாரக் கார்கள்தான் VF 6 மற்றும் VF 7.
VF என்றால் Vinfast. இது வியட்னாம் நாட்டுக் கம்பெனி. VF என்றால் Very Fast என்றுகூட அர்த்தம் எடுத்துக் கொள்ள முடியும். ஒரு கார் மான் வேகம் மயில் வேகம் போவது ஓகே. ஆனா, கார் செய்யும் கம்பெனி காரைவிட வேகமா போறது ஆச்சரியமா இருக்கு. இந்த கார் கம்பெனியோட தொழிற்சாலைக்குக் கடந்த 2024-ம் ஆண்டுதான் அடிக்கல்லே நட்டாங்க. ஆனா தொழிற்சாலையை கட்டி முடிச்சு கார் விற்பனையை இந்த ஆண்டு பண்டிகை காலத்துக்கு முன்பாகவே ஆரம்பித்து விடுவார்கள் போலிருக்கிறது.
சரி, இவ்வளவு வேகமாக வேலை நடக்குதே, அது எங்கன்னு கேட்டா… நம்ம தமிழ்நாட்டில்தான். அதுவும் தூத்துக்குடியில்தான். வின்ஃபாஸ்ட் இந்தியாவோட பேரன்ட் கம்பெனியே ஒரு Youngகான கம்பெனிதான். `வின்குரூப்’ங்கிற பேரன்ட் கம்பெனி, கடந்த 2017ம் ஆண்டுதான் Vinfast என்கிற இந்தக் கார் கம்பெனியை வியட்நாமில் துவங்கினாங்க. துவங்கிய மூன்றே வருடங்கில் அங்கே ரூட் தலையா இருந்த டொயோட்டா, ஹோண்டாவை எல்லாம் முந்திக்கொண்டு அந்த நாட்டின் நம்பர் ஒன் கார் கம்பெனியா வளர்ச்சி அடைஞ்சாங்க.
பிசினஸ்ங்கிறது ஒரு வகையில் கார் ரேஸ் மாதிரிதான். ஸ்ரெயிட் லைனா இருக்கிற டிராக்கில் வேகமா ஓட்டுவதில் முக்கியமில்லை. திருப்பங்களில் கரெக்ட்டா வேகத்தைக் குறைக்காமல் திருப்பணும். அதனால்தான் Races are won in the corners னு சொல்லுவாங்க. இனிமே வளர்ச்சிங்கிறது பெட்ரோல், டீசல் கார்களைவிட மின்சாரக் கார்களில்தான் இருக்கும் என்கிறதை சரியான நேரத்தில் கணித்து… இனி பெட்ரோல் டீசல் எல்லாம் வேணாம்… மின்சாரக் கார்களில் மட்டும் ஃபோக்கஸ் பண்ணுவோம்ன்னு அவங்க எடுத்த முடிவு கைமேலே… இல்லை… கார் மேல பலன் கொடுத்தது. அதனால், காரோட நிக்காம அடுத்த வருடமே மின்சார ஸ்கூட்டர், மின்சார பஸ்ஸும் உற்பத்தி செய்ய ஆரம்பிச்சாங்க. அடுத்து இந்தோனேசியாவில ஒரு தொழிற்சாலை, அமெரிக்காவில் ஒரு தொழிற்சாலைன்னு கட்ட ஆரம்பிச்சுட்டு, இப்ப தூத்துக்குடிவரைக்கும் வந்திருக்காங்க.
வின்ஃபாஸ்ட் கார் கம்பெனி ஆரம்பிக்கப்பட்டு எட்டே வருடங்களில் தெற்காசிய நாடுகளோட நிறுத்தாம அமெரிக்கா, கனடா, ஐரோப்பானு எட்டு திசைகளிலும் சிறகுகளை விரிச்சுப் பறக்கத் துவங்கியிருக்காங்க. 16,000 கோடி ரூபாயை இறக்கிறதா உறுதிமொழி கொடுத்திருக்கும் இந்த கம்பெனி… முதல் கட்டமாக மட்டும் 4,000 கோடி ரூபாய் முதலீடு செஞ்சிருக்காங்க! இந்தியா முழுவதும் தனது கார்களை விற்கவும் சர்வீஸ் செய்யவும் கார் முகவர்களைத் தேர்ந்தெடுக்கும் வேலையிலும் அவங்க இப்போது மும்மராக இறங்கி இருக்காங்க. இன்னொரு பக்கம் நம்ம நாட்டில் குறிப்பாக, நம்ம தமிழ்நாட்டில் சார்ஜிங் ஸ்டேஷன்ஸை அதிகமாக அமைக்கும் பணியிலும் அவங்க கவனம் செலுத்தப் போறாங்க.
சரி, எல்லா ஊரையும் விட்டுட்டு வின்ஃபாஸ்ட் தமிழ்நாட்டை ஏன் தேர்ந்தெடுத்தாங்கன்னா… அதுக்கு முக்கியக் காரணம் – மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்வற்கான ECO System… சுற்றுச்சூழல் நம்ம ஊர்லதான் இருக்கு. நம்நாட்டில் விற்பனை செய்யப்படும் 4 சக்கர மின்சார வாகனங்களில் 40 சதவிகிதம் நம் மாநிலத்தில்தான் உற்பத்தி செய்யப்படுது. ev ஸ்கூட்டர்ஸ் 70 சதவிகிதம் நம்ம மாநிலத்தில்தான் உற்பத்தி செய்யப்படுது. அதனால் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதற்கான Eco system இங்கதான் இருக்கு. அனைத்துக்கு மேலாக போட்டிகள் அதிகம் இல்லாத தூத்துக்குடி துறைமுகம் இருக்கு. அதுக்கும் மேலே திறமையான மனித வளமும் அறிவுசார்ந்த மாநிலமான நம் தமிழ்நாட்டில்தான் இருக்கு.
வியட்நாம் நாட்டின் வின்ஃபாஸ்ட்டிடம் VF3, VF9, VFe 34னு பல மின்சார ஆட்டக்காரர்கள் இருந்தாலும்… அவங்க முதல்ல களம் இறக்கி இருப்பது VF 6 தான்.
பார்க்க crossover-shaped SUV மாதிரி இருக்கும் இது ஒரு 5 சீட்டர். VF 6 நான்கு மீட்டருக்கு மேலே நீளமான கார். அதாவது இதன் நீளம் 4,238mm, அகலம் 1,820mm, உயரம் 1,594mm வீல்பேஸ் 2,730mm. 17 இஞ்ச் அலாய் வீல்ஸ் இருக்கு!
இதற்கு 59.6kWh பேட்டரி பேக் கொடுத்திருக்காங்க. இதோட front axle-ல்தான் எலெக்ட்ரிக் மோட்டாரை மவுன்ட் பண்ணியிருக்காங்க. ECO, PLUS னு இரண்டு வேரியன்ட்ஸ் இருக்கும். ECO வேரியன்ட்டில் WLTP கணக்குப்படி இதோட Range 399 கிமீ. இது 178hp அளவுக்கு சக்தியையும், 250Nm அளவுக்கு டார்க்கையும் வெளிப்படுத்தக்கூடியது. ப்ளஸ் வேரியன்ட்டில் 204hp பவரும் 310Nm டார்க்கும் இருக்கு. இது 380 கிமீ ரேஞ்ச் தரும். இரண்டிலும் அடாஸ் லெவல்-2, பெரிய 12.9 இஞ்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், OTA அப்டேட்ஸ் எல்லாமே இருக்கு!
இதுவும் வெளிப்பார்வைக்கு க்ராஸ்ஓவர் ஸ்டைல் டிசைன்தான் கொடுத்திருக்காங்க. இதிலும் Eco, Plus-னு 2 வேரியன்ட்ஸ் இருக்கு. இரண்டு வேரியன்ட்டிலுமே 75.3kWh பேட்டரி பேக்தான் இருக்கு. இதனோட எலெக்ட்ரிக் மோட்டார் 204hp சக்தியையும் 310 Nm அளவுக்கு டார்க்கையும் வெளிப்படுத்தக்கூடியது. ஆனால் ப்ளஸ் வேரியன்ட்டில் இரட்டை மோட்டார்கள் இருக்கு. இவை இரண்டும் சேர்ந்து 354hp சக்தியையும், 500Nm டார்க்கையும் வெளிப்படுத்தும். ஃபுல் சார்ஜ் செய்தால் ப்ளஸ் வேரியன்ட் 431 கிமீ செல்லும். இதுவே எக்கோ வேரியன்ட் 450 கிமீ வரை செல்லும்.
VF7 எக்கோ வேரியன்ட்டில் 19 இன்ச் அலாய்வீல்கள் இருக்கின்றன. இதுவே ப்ளஸ் வேரியன்ட்டாக இருந்தால் 20 மற்றும் 21 இன்ச் அலாய்வீல்களை ஆப்ஷனாகக் கொடுக்கிறார்கள். ECOவில் இருப்பது 12.9 இன்ச் கொண்ட டச் ஸ்க்ரீன் என்றால், ப்ளஸ் வேரியன்ட்டில் இருப்பது 15 இன்ச். இரண்டு வேரியன்ட்டுகளிலுமே அடாஸ் லெவல் 2 பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன.