திருப்பரங்குன்றம் மலை மீது அமர்ந்து பிரியாணி சாப்பிட்டதாக எழுந்த சர்ச்சையை அடுத்து திருப்பரங்குன்றத்தில் இன்று இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து மதுரை மாவட்டம் முழுவதும் இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், கேரளாவில் இருந்து திருப்பரங்குன்றம் செல்ல ரயில் மூலம் வந்த ஆர்எஸ்எஸ் தென் பாரத தலைவர் வன்னியராஜனை விருதுநகர் ரயில் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். திருப்பரங்குன்றத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா […]