Bottle Radha: ''எனக்கு கதை சொல்ல வரலைன்னு பா.ரஞ்சித் திட்டுவாரு!'' – இயக்குநர் தினகரன் சிவலிங்கம்

இன்று நம் சமூகம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்னையை மக்களுக்கு எளிமையான முறையில் எடுத்துரைக்கிறது குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகியிருக்கிற `பாட்டல் ராதா’ திரைப்படம். இப்படத்தை அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கியிருக்கிறார். படம் தொடர்பாக அவரைச் சந்தித்துப் பேசினோம்.

ஸ்கிரிப்ட் எழுதிய பிறகு தனியாக டைரக்ஷன் பண்ணலாம்னு நினைச்ச தினகரனின் மனநிலை என்னவாக இருந்துச்சு?

நான் `கபாலி’ படத்துல வேலை பார்க்கும்போது ஸ்கிரிப்ட் எதுவும் பண்ணல. எழுத முயற்சி பண்ணுவேன் அனா வராது. ஐடியாஸ் மாதிரி மட்டும் எழுதி வைப்பேன். `காலா’ முடிஞ்சதுக்கு அப்புறம் எனக்கு பயங்கர ரெஸ்பெக்ட் கிடைச்சது. அனா அது எனக்கு பயமாதான் இருந்தது. ஏன்னா இது எல்லாமே ரஞ்சித்தோட உழைப்பு. நாம் இப்படியே இருந்தா இதுல லாஸ்டாதான் வருவேம்னு தோணுச்சு. பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் அர்னால்ட் டாயின்பீ (Arnold Joseph Toinbee ) புத்தகங்கள் இருக்கு. அந்தப் புத்தகத்துல `நம்மளுக்கு தெரியுதோ தெரியலையோ தினமும் நமக்கு புடிச்ச விஷயத்தை செய்ய முயற்சி பண்ணனும்’னு சொல்லியிருப்பாங்க. அதுக்கு அப்புறம்தான் நான் எழுதவே தொடங்கினேன்.

தினகரன் சிவலிங்கம்

நீங்க எழுதின முதல் கதை கோவிட் போன்ற புறச்சூழல்களாலதான் திரைப்படமாக உருவாகவில்லையா?

நிறைய டிராவல் பண்ற மாதிரி இருந்தது. அதுக்குப் புறச்சூழல்களும் ஒரு காரணமாக இருந்ததுச்சு. தயாரிப்பாளர்கிட்ட கதையை சொல்லப்போனால் 150 பக்கம் கதையை ரெண்டு நிமிஷத்துல இல்ல பத்து நிமிஷத்துல சொல்ல சொல்றாங்க. எனக்கு எப்படி சொல்லணும்னு தெரியல. `நீ கதை நல்லா தானே எழுதற. அந்த கதையா சொல்லக்கூட உனக்குத் தெரியாதா?’ன்னு ரஞ்சித் திட்டுவாரு.

ராதாமணி என்ற கேரக்டருக்கு `பாட்டல் ராதா’ அப்படிங்கிற புனைபெயர் வைக்கணும்னு உங்களுக்கு எப்படி தோணுச்சு. அதுதான் படத்தோட டைட்டிலாக இருக்கணும்னு எப்படி முடிவு பண்ணீங்க?

`பாட்டல் ராதா’ என்ற பெயர் கேக்குறதுக்கு மாஸாக இருந்துச்சு. அதே போல அந்தக் கேரக்டர் டம்மி பீசாவும் இருக்கணும். அதேபோல நிறைய ஆடியன்ஸை கவர் பண்ணனும்னு தான் இப்படி வெச்சோம்.

பாட்டல் ராதா படத்தில்…

ராதா மணி என்ற கேரக்டருக்கு ஃபஹத் ,தினேஷ் போன்றவர்களை வைத்து பண்ணலாம் அப்படின்னு தான் ஃபர்ஸ்ட் முடிவு பண்ணீங்களா?

முதல்ல அந்தக் கேரக்டருக்கு வடிவேலு, யோகி பாபுன்னு காமெடியாக யோசிக்கலாம்னுதான் இருந்தோம் . லைவ் லொகேஷன்ல இறங்கி வேலை பாக்குற மாதிரி இருக்கணும். பெரிய பட்ஜெட்லையும் பண்ண முடியாது. அப்புறம்தான் புதுமுக நடிகர்களை வச்சு இந்தப் படத்தை பண்ணலாம்னு முடிவு பண்ணினோம்.

Sanchana Natarajan

சஞ்சனா நடராஜன் தான் அஞ்சலம் கதாபாத்திரத்துல நடிக்கணும்னு எப்படி முடிவு பண்ணுனீங்க?

சஞ்சனா ரொம்ப நல்ல நடிகர். சஞ்சனாவை எனக்கு ரஞ்சித்தான் பரிந்துரைப் பண்ணினார். அவங்க ரொம்ப எளிமையா, அழகா அந்தக் கதாபாத்திரத்தை பண்ணியிருந்தாங்க.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.