Flipkart Big Saving Days Sale: 5 பிராண்டட் ஸ்மார்ட்போன்களில் அட்டகாசமான சலுகைகள்

Flipkart Sale: ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? மலிவான விலையில் நல்ல ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பிளிப்கார்ட் விற்பனையில் சிறந்த ஸ்மார்ட்போன்களை சலுகை விலையில் வாங்கலாம். மலிவான விலையில் போன் வாங்க ஃப்ளிப்கார்ட் உங்களுக்காக மற்றொரு வாய்ப்பைக் கொண்டு வந்துள்ளது. 

Flipkart Big Saving Days Sale

மீண்டும் ஒருமுறை ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில் ஸ்மார்ட்போன்கள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்றன. பிளிப்கார்ட்டில் தற்போது பிக் சேவிங்ஸ் டேஸ் சேல் நடைபெற்று வருகிறது. இதில் 5 போன்கள் மிகச் சிறந்த தள்ளுபடிகள் கிடைக்கின்றன. பிளிப்கார்ட் விற்பனையில் அதிரடி தள்ளுபடியுடன் கிடைக்கும் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் பற்றி இங்கே காணலாம்.

Realme 13 Pro+ 5G: ரியல்மி 13 ப்ரோ+ 5ஜி

பட்டியலில் உள்ள முதல் ஸ்மார்ட்போன் Realme 13 Pro+ 5G. இது தற்போது விற்பனையில் தள்ளுபடியுடன் மிகவும் மலிவாகக் கிடைக்கிறது. நிறுவனம் இந்த போனை ரூ.36,999க்கு அறிமுகப்படுத்தியது, ஆனால் இப்போது இந்த போன் வெறும் ரூ.26,999க்கு கிடைக்கிறது. அனைத்து வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுடன் தொலைபேசியில் ரூ.2000 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Infinix Note 40 Pro+ 5G: இன்ஃபினிக்ஸ் நோட் 40 ப்ரோ+ 5ஜி

இந்த இன்ஃபினிக்ஸ் போனும் இப்போது மிகவும் மலிவாகக் கிடைக்கிறது. நிறுவனம் இந்த போனை ரூ.32,999க்கு அறிமுகப்படுத்தியது, ஆனால் இப்போது நீங்கள் ரூ.21,999க்கு இதை வாங்கலாம். போனில் எந்த வங்கி சலுகையும் இல்லை, ஆனால் எக்ஸ்சேஞ்ச் சலுகை மூலம் வாடிக்கையாளர்கள் ஒரு பெரிய தள்ளுபடியைப் பெற முடியும்.

Google Pixel 8 : கூகிள் பிக்சல் 8

பிளிப்கார்ட்டின் இந்த விற்பனையில் கூகிளின் இந்த தொலைபேசியும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. நிறுவனம் இந்த போனை ரூ.75,999க்கு அறிமுகப்படுத்தியது. ஆனால் இப்போது வாடிக்கையாளர்கள் அதை வெறும் ரூ.49,999க்கு வாங்கலாம். HDFC வங்கி கிரெடிட் கார்டு EMI விருப்பத்துடன் இந்த சாதனத்தில் ரூ.3,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

REDMI Note 13 Pro 5G : ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி

இந்த விற்பனையின் போது ரெட்மி ஸ்மார்ட்போன்களும் மலிவான விலையில் கிடைக்கின்றன. நிறுவனம் இந்த போனை ரூ.28,999 -க்கு அறிமுகப்படுத்தியது, ஆனால் இப்போது எந்த சலுகையும் இல்லாமல் வெறும் ரூ.19,999க்கு இதை வாங்கலாம். இந்த போனில் சிறப்பு வங்கி சலுகை எதுவும் இல்லை. ஆனால் எக்ஸ்சேஞ்ச் சலுகையுடன் தள்ளுபடியைப் பெறலாம்.

POCO X6 Neo 5G: போக்கோ எஸ்6 நியோ 5G

இந்தப் பட்டியலில் கடைசியாக இருப்பது POCO X6 Neo 5G போன். இது ரூ.19,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் இப்போது வாடிக்கையாளர்கள் அதை வெறும் ரூ.11,999க்கு வாங்க முடியும். அனைத்து வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுடன் தொலைபேசியில் ரூ.1000 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.