காஞ்சிபுரம்: காஞ்சிரம் மாவட்டத்தில் அமைந்துள்ள சாம்சங் நிறுவனத்தில் கடந்த ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய தொழிலாளர்கள் 3 பேர் அந்நிறுவனத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதை கண்டித்து, 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு எற்பட்டு உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். அங்கு தொழிற்சங்கம் அமைக்க அனுமதி, ஊதிய உயர்வு, போனஸ் […]