அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் இந்தியர்கள் நாடு கடத்தப்படுவதற்கு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று வெளியுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் இந்தியர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையின் முதல் கட்டமாக, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம் தாஸ் சர்வதேச விமான நிலையத்தில் புதன்கிழமை பிற்பகல் 104 இந்தியர்களுடன் ஒரு அமெரிக்க இராணுவ விமானம் […]