LED ஸ்மார்ட் டிவிக்களுக்கு 57% வரை தள்ளுபடி… அமேசான் வழங்கும் அசத்தல் ஆஃபர்

Bumper Discounts on LED TV: வீடு அல்லது அலுவலகத்திற்கு ஒரு புதிய ஸ்மார்ட் டிவியை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு நல்ல சான்ஸ் உள்லது. சலுகை விற்பனை இல்லாவிட்டாலும், அமேசானில் எல்இடி டிவியில் இப்போது பம்பர் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 32 இன்ச் முதல் 55 இன்ச் வரையிலான டிவி மாடல்களில் 57 சதவீதம் வரை பெரிய தள்ளுபடிகள் அமேசானில் மலிவாக விற்கப்படுகின்றன.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள டிவி மாடல்களில் தயாரிப்பு தள்ளுபடி தவிர, வங்கி சலுகைகள், எக்ஸ்சேன்ஞ் தள்ளுபடி மற்றும் வட்டி இல்லாத EMI வசதியும் உள்ளது. அதாவது நீங்கள் வட்டி செலுத்தாமல் வசதியாக பணத்தை எளிதாக திரும்ப செலுத்த முடியும்.

ரெட்மி 55 இன்ச் டிவி விலை (Redmi 55 inch TV Price)

55 இன்ச் திரை கொண்ட இந்த ரெட்மி டிவி அமேசானில் 40 சதவீத தள்ளுபடிக்கு (Discount Offers) பிறகு ரூ.32 ஆயிரத்து 999க்கு விற்பனை செய்யப்படுகிறது. 30 வாட் பவர்ஃபுல் ஸ்பீக்கர்களுடன் வரும் இந்த டிவி டால்பி ஆடியோ, டூயல் பேண்ட் வைஃபை, 4கே அல்ட்ரா எச்டி ரெசல்யூஷன், 2 ஜிபி ரேம், 8 ஜிபி சேமிப்பு ஆகியவற்றை ஆதரிக்கிறது. இது தவிர, இந்த டிவி பிரைம் வீடியோ மற்றும் நெட்ஃபிக்ஸ் போன்ற செயலிகளுடன் வருகிறது.

ஏசர் 43 இன்ச் டிவி விலை (Acer 43 inch TV Price)

43 இன்ச் ஸ்க்ரீன் கொண்ட பெரிய டிவியை வாங்க நினைப்பவர்களுக்கு, ரூ.20 ஆயிரம் பட்ஜெட் விலையில் ஏசர் நிறுவனத்தின் இந்த டிவி கிடைக்கும். அமேசானில் 57 சதவீத தள்ளுபடிக்குப் பிறகு ரூ.18,999 என்ற குறைந்த விலையில் 16 ஜிபி சேமிப்பு மற்றும் 30 வாட் டால்பி ஆடியோ சப்போர்ட் கொண்ட டிவியைப் பெறுவீர்கள். இந்த டிவியில் 1.5 ஜிபி ரேம், டூயல் பேண்ட் வைஃபை போன்ற சிறப்பு அம்சங்கள் உள்ளன, இது தவிர இந்த டிவி அமேசான் பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ், யூடியூப் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற செயலிகளை ஆதரிக்கிறது.

கோடாக் 32 இன்ச் டிவி விலை (Kodak 32 inch TV Price)

கோடாக் நிறுவனத்தின் இந்த 32 இன்ச் ஸ்மார்ட் டிவி அமேசானில் 43 சதவீத தள்ளுபடிக்குப் பிறகு ரூ.8499 (MRP ரூ. 14,999) என்ற விலையில் விற்கப்படுகிறது. 30 வாட் ஒலி வெளியீடு கொண்ட இந்த டிவியில் குவாட் கோர் ப்ராசசர், 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 4 ஜிபி சேமிப்பகம் உள்ளது. இந்த டிவி SonyLiv, Amazon Prime Video, YouTube மற்றும் Zee5 போன்ற செயலிகளை ஆதரிக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.