ரிலையன்ஸ் ஜியோ மலிவான ரீசார்ஜ் திட்டத்தை ஒன்றை கொண்டுள்ளது. இதன் மூலம் உங்களுக்கு குறைந்த கட்டணத்தில் 1000 ஜிபி டேட்டா மற்றும் அழைப்பு வசதி கிடைப்பதோடு மட்டுமல்லாமல் OTT இலவச சந்தா பலனையும் பெறலாம். ஜியோ 599 ரூபாய்க்கான திட்டத்தில் நீங்கள் அதிக அளவில் அதிவேக டேட்டாவைப் பெறுவீர்கள். மேலும் எந்த OTT இயங்குதளங்களுக்கு இலவச அணுகல் கிடைக்கும் என்பதையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
மலிவான ரீசார்ஜ் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ ஜியோ ஏர்ஃபைபர் பயனர்களுக்கு ரூ.599 என்ற குறைந்த கட்டணத்தில் மலிவான ரீசார்ஜ் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது, இந்த திட்டம் மிகவும் சிறப்பு அம்சங்கள் வாய்ந்தது. ஏனெனில் இந்த திட்டத்தில் குறைந்த கட்டணத்தில் பல நன்மைகள் வழங்கப்படுகின்றன.
ஜியோ ரூ.599 திட்ட விவரங்கள்
ரிலையன்ஸ் ஜியோ ரூ.599 திட்டத்தில் 1000 ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 30எம்பிபிஎஸ் வேகத்தில் வருகிறது. தரவு தவிர, இந்த திட்டம் AirFiber பயனர்களுக்கு இலவச வரம்பற்ற அழைப்பு மற்றும் 800 க்கும் மேற்பட்ட நேரடி டிவி சேனல்களை வழங்குகிறது. நிறுவனம் இலவச இன்ஸ்டாலேஷன் பலனை வழங்குகிறது. இதன் மூலம் 1000 ரூபாய் சேமிகக்லாம் என நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
OTT நன்மைகள்
ஜியோ ஏர்ஃபைபர் ரூ.599 திட்டத்தில், Disney Plus Hotstar, Sony Liv, ZEE5, JioCinema Premium, Sun NXT, Hoichoi, Discovery Plus, Alt Balaji, Eros Now, Lionsgate Play மற்றும் ShemarooMe உள்ளிட்ட பல OTT சேனல்களுக்கான இலவச அணுகல் வழங்கப்படுகிறது.
ஏர்டெல் 599 திட்ட விவரங்கள்
ஏர்டெல்லின் ரூ.599 எக்ஸ்ட்ரீம் ஃபைபர் திட்டமானது 30எம்பிபிஎஸ் வேகம், 350க்கும் மேற்பட்ட நேரலை டிவி சேனல்கள் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உட்பட 20க்கும் மேற்பட்ட OTT ஆப்ஸ்களை வழங்குகிறது.
ஏர்டெல்லின் திட்டம் FUP வரம்புடன் 3300 ஜிபி டேட்டா வசதியை வழங்குகிறது, இதில் கவனிக்க வேண்டிய ஒன்று, ஏர்டெல் திட்டத்தில் அழைப்பு நன்மை வழங்கப்படவில்லை. புதிய இணைப்பை எடுக்கும்போது, 6 அல்லது 12 மாத திட்டத்தைத் தேர்வுசெய்தால், நீங்கள் இன்ஸ்டாலேஷன் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை, ஆனால் நீங்கள் ஒரு மாதாந்திர திட்டத்தைத் தேர்வுசெய்தால், அதற்கு இன்ஸ்டாலேஷன் கட்டணமாகரூ.1500 செலுத்த வேண்டும்.
ஜிஎஸ்டிக்குப் பிறகான கட்டண தொகை
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ரூ 599 திட்டமானது 18 சதவீத ஜிஎஸ்டிக்குப் பிறகு உங்களுக்கு ரூ.706.82 செலவாகும். ஜியோவின் ரூ.599 உடன், ரூ.107.82 (18 சதவீத ஜிஎஸ்டி கட்டணம்) வசூலிக்கப்படும்.