“என் மனைவிக்கு அதை ஒருபோதும் பண்ணக் கூடாதுன்னு நினைப்பேன்!'' – நடிகர் பொன்வண்ணனுடன் ஒரு சிட் சாட்!

சின்னத்திரையிலும் அதிரடி காட்டிக் கொண்டிருக்கிறார் நடிகர் பொன்வண்ணன்.

சமீபத்தில் `உப்பு புளி காரம்’ வெப் சீரிஸ் மூலம் பல குடும்பங்களுக்கும் ஃபேவரைட்டானவர் தற்போது புதியதாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் `கெட்டி மேளம்’ தொடரில் நடித்து வருகிறார். அவருடன் ஒரு சிட் – சாட் போட்டோம். சினிமா, சின்னத்திரை, பர்சனல் என வாழ்க்கையின் பல பக்கங்களைப் புரட்டியது இந்த உரையாடல்.

நம்மிடையே பேசிய பொன்வண்ணன், “ உப்பு புளி காரம் வெப் சீரிஸ் முடிஞ்சதும் ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கலாம்னுதான் திட்டமிட்டேன். அந்த சீரிஸ் பண்ணீட்டு இருக்கும்போதுதான் இந்த `கெட்டி மேளம்’ சீரியலோட வாய்ப்புக் கிடைச்சது. சொல்லப்போனால், இந்த சீரியலோட வாய்ப்பை முதல்ல நிராகரிச்சேன். 25 வருஷமாக நான் சின்னத்திரையில நடிச்சிட்டிருக்கேன். `அண்ணாமலை’, `மர்மதேசம்’ மாதிரியான சீரியஸ்கள்ல நடிச்சிருக்கேன். வெப் சீரிஸ்னு வரும்போது இப்போ சமீபத்துல `ஐந்தாம் வேதம்’ சீரிஸ்ல நடிச்சிருந்தேன். பிறகு, `உப்பு புளி காரம்’ வெப் சீரிஸ் பண்ணினேன்.

Actor Ponvannan

இந்த சீரிஸுக்குப் பெரிய அளவிலான வரவேற்பு கிடைச்சது. சொல்லப்போனால் ஒரு வெப் சீரியல் மாதிரி குடும்பங்களுக்கு இந்த சீரிஸ் அவ்வளவு ஃபேவரைட் ஆகிடுச்சு. பொதுவாக, வெப் சீரிஸ் பார்க்கிறவங்க தனியாக உட்கார்த்து ஒவ்வொரு எபிசோடாக பார்பாங்க. ஆனால், `உப்பு புளி காரம்’ வெப் சீரிஸ் குடும்பத்தோட எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து பார்க்கணும்னு ஒரு மனநிலையை உருவாக்கியிருக்கு. இந்த சீரிஸுக்குப் பிறகு இடைவெளி எடுத்துக்கிறதுதான் திட்டம். ஆனால், இந்த சீரிஸுக்குப் பிறகு இப்படியான ஒரு ப்ராஜெக்ட் பண்ணினால் நல்லா இருக்கும்னு யோசிருப்போம்ல அந்த மாதிரியே இந்த `கெட்டி மேளம்’ சீரியல் கதாபாத்திரமும் இருந்தது.” என்றார்.

“ வாழ்க்கையில முதல் பெண் எல்லோருக்கும் அம்மாதான். அதன் பிறகு சகோதரி இருப்பாங்க. இதை தாண்டி பெண் உறவுகளாக சிலர் இருப்பாங்க. இதன் பிறகு வெளியில இருந்து பெண்ணாக மனைவி வருவாங்க. அதற்கடுத்து என் மகள் பெண்ணாக வருவாள். என் சகோதரிக்கு ஒரு அண்ணனாக தங்கச்சிக்கு செஞ்சுக் கொடுக்கணும்னு நினைக்கிற விஷயங்களைப் பண்ணிக் கொடுப்பேன். இப்படி அம்மா, தங்கையோட உணர்வுகளையும் ரசனைகளையும் மதிக்கிறேன். அதே மாதிரிதான் மனைவியோட உணர்வுகளையும் ரசனைகளையும் நான் மதிக்கிறேன். லைஃப் பார்ட்னர்தான்…அதுக்குனு எனக்காக எல்லா விஷயத்தையும் விட்டுட்டு எனக்கு கீழ இருக்கணும்னு நினைக்கிறது சுயநலம்.

Actor Ponvannan

அதை பண்ணவேக்கூடாதுனு நினைப்பேன். அவங்களுக்கு எந்தவிதமான தொந்தரவும் இல்லாத ஒரு பார்ட்னராக இருக்கணும்னு ஆசைப்படுறேன். நம்மளோட ஆசைகளை குழந்தைகள்கிட்ட திணிக்க முடியாது. நான் சின்ன வயசுல புத்தகம் படிச்சிட்டேன் இருப்பேன்.

லைப்ரேரிலதான் கிடப்பேன். அந்த நேரத்துல என் பெற்றோர்களுக்குக்கூட உதவி பண்ணமாட்டேன். அவங்க என்னை வற்புறுத்தல. எனக்குனு அப்போ சுதந்திரம் கொடுத்தாங்க. அதே மாதிரி என்னுடைய குழந்தைகளுக்கு நான் சுதந்திரம் கொடுக்கணும்னு நினைக்கிறேன். அவங்க் சினிமாவுக்கு வரணும்னு ஆசைப்பட்டால் நான் மறுக்கமாட்டேன். அது அவங்களோட விருப்பம். அந்த நேரத்துல சினிமாவுக்கு நான் அவங்களுக்கு வழிகாட்டுவேன்! அவங்க விருப்பப்படி போகணும்னு நினைச்சால் அதுவும் அவங்க விருப்பம்.” என்றவர், “என்னுடைய குடும்பம் சாதிய கட்டமைப்பைக் கொண்ட ஒரு விவசாயக் குடும்பம். ரோல் மாடலாக எடுத்துகிற மாதிரியான புரட்சிகனமான முன்னோடிகள் எங்க ஊர்ல யாருமே இல்ல. என்னை தூண்டியது படிப்பு மட்டும்தான்.

Actor Ponvannan

புத்தகங்கள்தான் ஆசான். என்னுடைய வாழ்க்கையில புத்தகங்கள்தான் எனக்கு வழிகாட்டியாகவும் இருந்திருக்கு. என்னுடைய அறிவை வளர்த்திருக்கிறதுக்காகவோ, என்னை அடையாளப்படுத்திகிறதுக்காகவோ நான் புத்தகத்தை படிக்கல. என்னுடைய சிறுவயதில இருந்தே என்னுடைய தேடல் புத்தகங்களை நோக்கியே இருந்திருக்கு. அந்த புத்தகங்கள் எனக்கு பலருடைய வாழ்க்கையைப் பற்றி சொல்லியிருக்கு. திரைத்துறைக்கு வந்தப் பிறகு விஷுவலாக சமூக விழிப்புணர்வோட கதைகளை சொல்லணும்னு ஆசைப்பட்டேன். எனக்கு எந்த விஷயங்களெல்லாம் ஆசானாக இருந்ததோ அதை மத்தவங்களுக்கும் பகிரணும்னு விரும்பினேன்!” எனக் கூறி முடித்துக் கொண்டார்.

Vikatan Play

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/TATAStoryepi01

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.