டெல்லி: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்தியஅரசை வலியுறுத்தி திமுக எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம், திமுக எம்பி கனிமொழி தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி.க்கள் மட்டுமின்றி, திமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்களும் பங்கேற்றனர். வங்கக்கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதாக வாடிக்கையாக தொடர்கிறது. இந்த விஷயத்தில் இந்தியா, இலங்கை இடையே பல முறை பேச்சுவார்த்தை […]
