What to watch on Theatre & OTT: விடாமுயற்சி, Thandel -இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

விடாமுயற்சி (தமிழ்)

‘விடா முயற்சி’

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். விவாகரத்து கேட்கும் மனைவியுடன் கடைசியாக ஒரு வெளிநாட்டுப் ட்ரிப் செல்ல விரும்பி அஜர்பைஜான் செல்கிறார் அஜித்குமார். அங்கு மனைவி காணமால் போக,பணத்திற்காக சைக்கோ சீரியல் கில்லிங் செய்யும் கும்பலிடமிருந்து தன் மனைவியைக் காப்பாற்றினாரா?, அஜித்தை விவாகரத்து செய்ய த்ரிஷாவின் மனநிலை மாறியதா? என்பதே இப்படத்தின் கதைக்களம். சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் பிப் 6-ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Thandel (தெலுங்கு)

Thandel

சந்தோ இயக்கத்தில் நாக சைத்தன்யா, சாய் பல்லவி, ‘ஆடுகளம்’ நரேன், கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘Thandel’. கடலில் மீன் பிடிக்க எல்லை மீறிச் சென்று பாகிஸ்தான் இராணுவத்திடம் மாட்டிக்கொள்ளும் சைத்தன்யாவின் காதல், தேசப்பற்று, துணிச்சல் ஆகிவற்றைப் பேசும் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான இது பிப் 7ம் தேதி (நேற்று) முதல் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Narayaneente Moonnanmakkal (மலையாளம்)

Narayaneente Moonnanmakkal

ஷரன் வேணுகோபால் இயக்கத்தில் சுராஜ், ஜோஜு ஜார்ஜ், லோபஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘Narayaneente Moonnanmakkal’. மூன்று சாகோதர்களின் நெகிழ்ச்சியாக குடும்பக் கதையான இது பிப் 7ம் தேதி (நேற்று) முதல் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Badass Ravi Kumar (இந்தி)

Badass Ravi Kumar

கெய்த் கோமஸ் இயக்கத்தில் ஹிமேஷ், சன்னி லியோன், பிரபு தேவா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘Badass Ravi Kumar’. ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான இது பிப் 7ம் தேதி (நேற்று) முதல் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Loveyapa (இந்தி)

Loveyapa

அத்வைத் சந்திரன் இயக்கத்தில் ஜுனைத் கான், குஷி கபூர், குருஷா கபூர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘Loveyapa’. ரோமண்டிக் காதல் திரைப்படமான இது பிப் 7ம் தேதி (நேற்று) முதல் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Conclave (ஆங்கிலம்)

Conclave

எட்வேர்ட் பர்கர் இயக்கத்தில் ரால் பியானிஸ், ஸ்டான்லி, ஜான் லித்கவ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘Conclave’. ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது பிப் 7ம் தேதி (நேற்று) முதல் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்

Anuja (இந்தி) – Netflix – Feb 5

Mrs (இந்தி) – Zee5 –

The Mehta Boys (இந்தி) – Amazon Prime Video

Kinda Pregnant (ஆங்கிலம்) – Netflix

இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்

இந்த வார வெப்சீரிஸ்கள்

Kobali (தெலுங்கு) – Hotstar

Bada Naam Karenge (இந்தி) – SonyLIV

INVINCIBLE: S3 (ஆங்கிலம்) – Amazon Prime Video

Apple Cider Vinegar (ஆங்கிலம்) – Netflix

தியேட்டர் டு ஓடிடி

மெட்ராஸ்காரன் (தமிழ்) – Aha

Game Changer (தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி) – Amazon Prime Video

The Best Christmas Pageant Ever (இந்தி) – Amazon Prime Video

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.