ராய்பூர்,
சத்தீஷ்கார் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் தந்தேவடா மாவட்டத்தில் அரன்பூர் கிராமத்தில், முன்னாள் பஞ்சாயத்து தலைவரான ஜோகா பர்ஸ் (வயது 52) நக்சலைட்டுகளால் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
நேற்று முன்தினம் இரவில் அவரது வீட்டில் நுழைந்த மர்ம மனிதர்கள், அவரை குடும்பத்தினர் முன்னிலையிலேயே கோடரியால் தாக்கினாார்கள். இதில் அவர் பரிதாபமாக செத்தார். ஜோகரின் மனைவி தற்போது பஞ்சாயத்து தலைவியாக உள்ளார். ஜோகர் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் அதே பதவிக்கு போட்டியிட்டார். அடுத்த வாரத்தில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
அவரது கொலைக்கு நக்சலைட்டுகள் பொறுப்பேற்கவில்லை. இதற்கு முன்பு கடந்த 4-ந்தேதி 30 வயது வாலிபர் ஒருவரையும், கடந்த ஜனவரி 26-ந்தேதி கிராமவாசி ஒருவரையும் நக்சலைட்டுகள் கொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.