Virat Kholi | ஒரே போட்டியில் பல சாதனைகளை படைக்கப்போகும் விராட் கோலி..!

Virat Kholi Record | இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கட்டாக் மைதானத்தில் பிப்ரவரி 3ம் தேதி நடக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி பல சாதனைகளை படைக்க வாய்ப்புள்ளது. சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 2 பேட்ஸ்மேன்கள் மட்டுமே செய்த சாதனைப் பட்டியலில் விராட் கோலி பெயரும் இடம் பெறப்போகிறது. இந்த உலக சாதனையை நிகழ்த்த விராட் கோலிக்கு இன்னும் 94 ரன்கள் மட்டுமே தேவை. அதேநேரத்தில் இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரையும் கைப்பற்றும். 

விராட் கோலி சாதனை

ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இதுவரை இரண்டு பேட்ஸ்மேன்கள் மட்டுமே 14000 ரன்களை கடந்துள்ளனர். இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் 463 ஒருநாள் போட்டிகளில் 18426 ரன்களையும், இலங்கை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் குமார் சங்ககரா 404 போட்டிகளில் 14234 ரன்களையும் குவித்துள்ளனர். இந்த சாதனையை படைக்க விராட் கோலிக்கு இன்னும் 94 ரன்கள் மட்டுமே தேவை. இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் அவர் 94 ரன்கள் எடுத்த இந்த சாதனைப் பட்டியலில் இடம்பிடிப்பார். அத்துடன் 14000 ரன்களை மிக குறைந்த போட்டியில் எடுத்த முதல் பிளேயர் என்ற சாதனையையும் விராட் கோலி படைப்பார். விராட் கோலி இதுவரை 295 ஒருநாள் போட்டிகளில் 58.18 சராசரியாக 13,906 ரன்கள் எடுத்துள்ளார், இதில் 50 சதங்கள் மற்றும் 72 அரைசதங்கள் விளாசியுள்ளார். 

ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்

1. சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) – 18,426 ரன்கள்

2. குமார் சங்கக்கார (இலங்கை) – 14,234 ரன்கள்

3. விராட் கோலி (இந்தியா) – 13,906 ரன்கள்

4. ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) – 13,704 ரன்கள்

5. சனத் ஜெயசூர்யா (இலங்கை) – 13,430 ரன்கள்

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்

1. சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) – 34357 ரன்கள்

2. குமார் சங்கக்கார (இலங்கை) – 28016 ரன்கள்

3. ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) – 27483 ரன்கள்

4. விராட் கோலி (இந்தியா) – 27324 ரன்கள்

5. மஹேல ஜெயவர்தனே (இலங்கை) – 25957 ரன்கள்

6. ஜாக் காலிஸ் (தென்னாப்பிரிக்கா) – 25534 ரன்கள்

7. ராகுல் டிராவிட் (இந்தியா) – 24208 ரன்கள்

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்

1. சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) – 100 சதங்கள்

2. விராட் கோலி (இந்தியா) – 81 சதங்கள்

3. ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) – 71 சதங்கள்

4. குமார் சங்கக்கார (இலங்கை) – 63 சதங்கள்

5. ஜாக் காலிஸ் (தென்னாப்பிரிக்கா) – 62 சதங்கள்

ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள்

1. விராட் கோலி (இந்தியா) – 50 சதங்கள்

2. சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) – 49 சதங்கள்

3. ரோஹித் சர்மா (இந்தியா) – 31 சதங்கள்

4. ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) – 30 சதங்கள்

5. சனத் ஜெயசூர்யா (இலங்கை) – 28 சதங்கள்

மேலும் படிக்க | சாம்பியன்ஸ் டிராபி 2025: விளையாடாத நட்சத்திர வீரர்கள்.. முழு பட்டியல் இதோ!

மேலும் படிக்க | Ind vs Eng ODI Series: ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கமா? 2வது போட்டியில் நடக்கப்போகும் மாற்றம்!

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.