துலாம் ராசி அன்பர்களே!
வருமானத்துக்கு குறை இருக்காது. மற்றவர்களால் குடும்பத்தில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டு கணவன் – மனைவி உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள். அவ்வப்போது சிறிய அளவில் ஆரோக்கியக் குறைபாடு உண்டாகக் கூடும்.
வேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். விற்பனைப் பிரதிநிதியாகப் பணி செய்யும் அன்பர்கள் வெளியூர் பயணங்களை மேற்கொள்ளவேண்டி இருக்கும்.
வியாபாரத்தை முன்னிட்டு சிலர் வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ளவேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/6768fa117a2e1.jpg)
பெண்கள் குடும்பத்தில் மற்றவர்களுடன் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை ஏற்படுவதுடன் எதிர்பார்த்த சலுகையும் கிடைக்கும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 12,15
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,5
வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் அரோகதா |
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத் ||
விருச்சிகராசி அன்பர்களே!
குடும்ப வருமானம் நல்லபடி இருக்கும். எதிர்பார்க்கும் நல்ல செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். சிலருக்கு திருமண முயற்சிகள் பலிதமாகும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்கவும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.
வேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தினரின் ஆதரவு கிடைக்கும்
புதிதாக வியாபாரம் தொடங்க விரும்புபவர்கள் இந்த வாரம் தொடங்கலாம். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/viruchikam.jpg)
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு நிம்மதியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் பணிகளைப் பொறுப்பாகச் செய்வது நல்லது.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 12,15
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,6
சந்திராஷ்டமம்: 10 இரவு வரை
வழிபடவேண்டிய தெய்வம்: ஶ்ரீமகா விஷ்ணு
பரிகாரம்: தினமும் காலை வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
பச்சைமாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா! அமரரேறே! ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே
தனுசுராசி அன்பர்களே!
குடும்பத்தில் அடிக்கடி அமைதிக் குறைவான சம்பங்கள் நிகழக்கூடும். வரவுக்கேற்ற செலவுகளும் இருக்கும். வேலை அல்லது கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவதற்கான வாய்ப்பு உண்டாகும். பயணங்களின் காரணமாக மனதில் உற்சாகம் பிறக்கும்.
அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.சக பணியாளர்களும் இணக்கமாகப் பழகுவார்கள்.
வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். மற்றபடி பாதிப்பு இல்லை. பழைய பாக்கிகள் வசூலாவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/09.jpg)
குடும்ப நிர்வாகத்தை கவனித்து வரும் பெண்கள் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சில சலுகைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 13,16
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,6
சந்திராஷ்டமம்: 10 இரவு முதல் 11,12 நடு இரவு வரை
வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை
பரிகாரம்: வீட்டுப் பூஜையறையில் விளக்கேற்றி வைத்து கீழ்க்காணும் பாடலை தினமும் 27 முறை பாராயணம் செய்யவும்.
இல்லாமை சொல்லி ஒருவர்தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒருக்காலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே
மகரராசி அன்பர்களே!
பொருளாதார வசதி நல்லபடியே நீடிக்கிறது. எனவே கூடுதல் செலவுகள் ஏற்பட்டாலும் உங்களால் அதைச் சமாளித்துவிட முடியும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பொறுமை அவசியம். கணவன் – மனைவிக்கிடையே பிரச்னை ஏற்பட்டு இருந்தால் இப்போது சரியாகிவிடும்.
அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகவே காணப்படுவீர்கள்
வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் தகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/6768f9e7e6bf3.jpg)
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தரும் வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 10,11
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 6, 9
சந்திராஷ்டமம்: 12 நடு இரவு முதல் 13,14,15 மாலை வரை
வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
பரிகாரம்: வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நலம் சேர்க்கும்.
தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதி சூடி
காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநான் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!
கும்பராசி அன்பர்களே!
பொருளாதார நிலை சற்று சுமாராகத்தான் இருக்கும் என்றாலும் அநாவசிய செலவுகளும் இருக்காது. உஷ்ணத்தால் கண் மற்றும் வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும். உடனே மருத்துவரிடம் சென்று சிகிச்சை செய்துகொள்வது நல்லது.பயணங்களின்போது எச்சரிக்கை தேவை.
வேலைக்கு விண்ணப்பம் செய்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர் களுக்கு சலுகைகள் கிடைக்கும்.
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் பிரச்னை எதுவும் இருக்காது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/6768f9ecef39e.jpg)
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு மனதை சஞ்சலப் படுத்தும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 11,14
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,5
சந்திராஷ்டமம்: 15 மாலை முதல் 16 முழுவதும்
வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
ஐந்துகரத்தனை ஆனைமுகத்தனை
இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை
நந்திமகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுவனே
மீனராசி அன்பர்களே!
சிறு சிறு உடல்நலக் குறைபாடு தோன்றக்கூடும். உடனுக்குடன் சிகிச்சை செய்து கொள்வது நல்லது. பேச்சிலும் செயலிலும் நிதானமும் பொறுமையும் மிக அவசியம். கணவன் – மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதால் பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரமும் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். பதவி உயர்வோ அல்லது ஊதிய உயர்வோ கிடைக்கக்கூடும்.
வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவதற்காக பாடுபடுவீர்கள். அதிக உழைப்பின் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்பட்டு நீங்கும்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/meenam.jpg)
குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் மிகவும் பொறுமையாக இருக்கவேண்டியது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை சாதகமாக இருக்கும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 12,15
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3,7
வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை
பரிகாரம்: வீட்டுப் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை தினமும் 27 முறை பாராயணம் செய்யவும்.
பைரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா
வைரவி, மண்டலி, மாலினி, சூலி, வராஹி – என்றே
செயிர் அவி நான் மறை சேர் திருநாமங்கள் செப்புவரே