கட்டாக்கில் நடந்த இந்தியா – இங்கிலாந்து இடையேயான இரண்டாவது ஓடிஐ போட்டியை இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா 90 பந்துகளில் 119 ரன்களை எடுத்திருந்தார்.
அவரின் சதத்தால் இந்திய அணி எளிதில் வென்றது. இந்நிலையில், போட்டிக்குப் பிறகு பேசிய ரோஹித் சர்மா அவர் எப்படி சதமடித்தார் என்பது குறித்துப் பேசினார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/AP25040537948645.jpg)
ரோஹித் சர்மா பேசியதாவது, “அணிக்காக மதிப்புமிக்க ரன்களை எடுத்துக்கொடுத்ததில் மகிழ்ச்சி. என்னுடைய இன்னிங்ஸை சில பகுதிகளாக பிரித்துக்கொண்டேன். இது ஓடிஐ. டி20 யின் நீண்ட வடிவம். டெஸ்ட்டை விட குறுகிய வடிவம். இங்கே குறிப்பிட்ட இடைவேளைகளில் எப்படி ஆட வேண்டும் என்பதில் பேட்டர் கவனமாக இருக்கவேண்டும். ஸ்டம்ப் டு ஸ்டம்பாக டைட்டாக வீசவே பௌலர்கள் நினைப்பார்கள் என எனக்குத் தெரியும். எனவே அதுக்கு ஏற்றார் போல பீல்டில் இருக்கும் கேப்களைப் பார்த்து ஆடி ஷாட் ஆட தயாராகவே இருந்தேன்.
கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஆகியோரிடமிருந்து எனக்கு நல்ல சப்போர்ட் கிடைத்தது. கில்லுடன் பேட்டிங் ஆடுவது நல்ல அனுபவம். அவர் ஒரு க்ளாஸான வீரர். அணிக்காக களத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதில் அவர் கவனமாக இருப்பார். பௌலிங்கைப் பொறுத்தவரை பவர்ப்ளே மற்றும் டெத்தை பற்றித்தான் அனைவரும் பேசுவார்கள். ஆனால், மிடில் ஓவர்களும் முக்கியம். மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசினால் டெத் ஓவரில் நம் மீது அழுத்தம் இருக்காது என நினைக்கிறேன். கடந்த போட்டியிலும் சரி இந்தப் போட்டியிலும் மிடில் ஓவர்களில் எங்களுக்கு விக்கெட் கிடைத்தது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/20250209222648.jpg)
அது பெரிய சௌகரியத்தைக் கொடுத்தது. ஒவ்வொரு போட்டியிலும் இன்னும் மேம்பட்டுக் கொண்டு இருக்கவே விரும்புகிறோம். அணியின் பயிற்சியாளர் மற்றும் கேப்டனின் எண்ணத்தை புரிந்துகொண்டு தங்களுக்கான ரோலை உணர்ந்து வீரர்கள் ஆடினால் எப்போதுமே சிக்கல் இருக்காது.” என்றார்.