லண்டன்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி இன்று (பிப்ரவரி 9) நடைபெற்று வருகிறது. 3-வது மற்றும் கடைசி போட்டி வரும் 12-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த 3-வது போட்டிக்கான இங்கிலாந்து அணியில் கூடுதல் பேட்ஸ்மேனாக டாம் பான்டன் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் 5 வருடங்களுக்கு பின் இங்கிலாந்து அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :