பேரூர் இன்று பேரூர் கோவில் குடமுழுக்கை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பேரூரில் உள்ள கொங்கு மண்டலத்தில் உள்ள சிவன் தலங்களில் 1,800 ஆண்டு பழமையானது பேரூர் பட்டீசுவரர் கோவிலின் குடமுழுக்கு விழா, இன்று (திங்கட்கிழமை) காலை 9.15 மணியிலிருந்து 10.15 மணிக்குள் நடக்கிறது. எனவே பக்தர்களின் வசதி மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, இன்று அதிகாலை 4 மணி முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக பேரூர் காவல்துறை அறிவித்திருந்தது. அதன்படி பேரூருக்கு மேற்கே தொண்டாமுத்தூர் […]
