”களவாணி’, ‘வாகை சூடவா’ உள்பட பல படங்களை இயக்கிய ஆர். சற்குணம், அடுத்து இரண்டு வெப் சிரீஸ்களை இயக்க உள்ளார் என்றும், ஒன்றை பா.ரஞ்சித்தின் நீலம் நிறுவனமும், இன்னொரு வெப் சிரீஸை இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரியும் தயாரிக்க உள்ளனர் என்ற தகவல் பரவி வருகிறது.
அமேஸான், நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஓடிடி நிறுவனங்கள், தங்களின் பிரேத்யேக தயாரிப்புகளாக வெப் தொடர்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் அந்த இரு நிறுவங்களுக்கும் தலா ஒரு வெப் சிரீஸை இயக்குகிறார் சற்குணம். பா. ரஞ்சித் தயாரிப்பில் இயக்கும் வெப்சீரிஸை நெட்ஃபிளிக்ஸிலும், புஷ்கர் காயத்ரி தயாரிக்கும் வெப்சிரீஸ் அமேஸானிலும் வெளியாகிறது.
விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான ‘விக்ரம் வேதா’ உள்பட பல படங்களை இயக்கியவர் புஷ்கர் காயத்ரி. இவர்கள் இதற்கு முன் பிரம்மா, அனுசரண் ஆகியோரின் இயக்கத்தில் ‘சுழல்’ என்ற வெப்சீரிஸை தயாரித்துள்ளனர். அதனை அடுத்து எஸ்.ஜே.சூர்யா, லைலாவின் நடிப்பில் ‘வதந்தி’ என்ற வெப்சீரிஸையும் தயாரித்துள்ளனர். ஆண்ட்ரு லூயிஸ் இயக்கியுள்ளார். அந்த தொடர் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன.
புஷ்கர்- காயத்ரியின் தயாரிப்பில் மூன்றாவது வெப் சீரிஸாக ‘சுழல் 2’ உருவாகியிருக்கிறது. ‘பரியேறும் பெருமாள்’ கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், மஞ்சுமா மோகன் என பலரும் நடித்துள்ளனர்.
‘சுழல்’ தொடரை இயக்கியவரான பிரம்மாவும், சர்ஜூன் கே.எமும் இணைந்து இந்த தொடரை இயக்கியுள்ளனர். அமேஸானில் இந்த தொடர் வருகிறது.
இதனை அடுத்து அவர்கள் தயாரிக்கும் நான்காவது வெப்சிரீஸை சற்குணம் இயக்குகிறார். ஹீரோயின் சென்ட்ரிக் தொடரான இதில் துஷாரா விஜயன், லீட் ரோலில் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. இதன் படப்பிடிப்பிற்காக ஊட்டி, கொடைக்கானல், கேரளா பகுதிகளில் லொக்கேஷன் பார்த்து வருகின்றனர். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என சொல்கின்றனர்.
இதற்கிடையே பா.ரஞ்சித் தயாரிக்கும் வெப் சிரீஸின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகளையும் முடித்து விட்டார் சற்குணம். இதுவும் ஹீரோயின் சென்ட்ரி. இந்த தொடரில் தான் நடிகை ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிப்பாரென தகவல் பரவி வருகிறது. இந்த வெப்தொடரை நெட்ஃபிளிக்ஸ் இணைந்து தயாரிப்பதாலும், தெலுங்கில் ஜான்வி கபூர் அறிமுகமான ‘தேவரா” ஜான்விக்கு பெரிய பெயரை பெற்று தராததாலும் அவர் இந்த வெப்சீரீஸில் நடித்தாலும் ஆச்சரியமில்லை என்கின்றனர்.
இந்த தொடருக்கான வேலைகளும் ஒரு பக்கம் சற்குணம் மும்முரமாக இயங்கி வருகிறார் என்கின்றனர்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!