இங்கிலாந்துக்கு எதிராக கட்டாக்கில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தனது முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். தனது 33வது வயதில் இந்திய அணியில் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி உள்ளார். முதலில் அறிவிக்கப்பட்ட இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி இல்லை. ஆனால் டி20 தொடரில் சிறப்பாக பந்துவீசி இங்கிலாந்தை திணறடித்த காரணத்தினால் ஒருநாள் தொடர் தொடங்கும் 2 நாட்களுக்கு முன்பு வருண் இந்திய அணியில் இணைந்தார். முதல் ஒருநாள் போட்டியில் விளையாடாத வருணுக்கு 2வது ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது.
