புதுடெல்லி,
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா மிகவும் கோலாகலமாக நடந்து வருகிறது. கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கிய இந்த நிகழ்வில் இதுவரை 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.
உலகின் மிகப்பெரிய இந்த கலாசார, ஆன்மிக நிகழ்வில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (திங்கட்கிழமை) பங்கேற்கிறார். இதற்காக பிரயாக்ராஜ் செல்லும் ஜனாதிபதி அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகிறார். அத்துடன் பல்வேறு சிறப்பு வழிபாடுகளையும் அவர் மேற்கொள்வார் என ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. முன்னதாக பிரதமர் மோடி கடந்த வாரம் மகா கும்பமேளாவில் புனித நீராடியது குறிப்பிடத்தக்கது.