இம்பால்
மணிப்பூர் மாநிலம் இம்பால் மேற்கு மாவட்டம் நரன்கொஞ்சில் பகுதியில் 2 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர். இருவரும் தடை செய்யப்பட்ட ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள். பணம் பறிப்பு, சட்டவிரோதமாக ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கடத்தலில் ஈடுபட்டதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஒரு கைத்துப்பாக்கியும், ரூ.3 ஆயிரம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுபோல், அதே மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட மக்கள் விடுதலைப்படையை சேர்ந்த ஒரு பயங்கரவாதியை பணம் பறிப்பு வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :