தங்கம் விலை இன்று கிராம் ஒன்றுக்கு ரூ. 35 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 7,980க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் ஒரு சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 63,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கடந்த மூன்று வாரங்களாக கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் ஒரு கிராம் சுமார் ரூ. 7200 என்று இருந்த நிலையில் தற்போது சுமார் 8000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது நகை வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. […]
