MS Dhoni: ரசிகர்களின் செல்ஃபி ஸ்பாட்டாக மாறிய தோனியின் ராஞ்சி வீடு – என்ன காரணம் தெரியுமா?

ராஞ்சில் உள்ள எம் எஸ் தோனியின் வீடு ரசிகர்களுக்கு செல்ஃபி ஸ்பாட்டாக மாறியுள்ளது.

தோனியின் வீடு எண் ‘7’ கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டின் சுவர்களில் அவரது சின்ன சின்ன கிரிக்கெட் ஷாட்களும் இடம்பெற்றுள்ளன. தோனிக்கு தனது கிரிக்கெட் வாழ்க்கையில் எண் 7 எவ்வளவு முக்கியம் என்று அனைவரும் அறிவர். காரணம் இந்த எண் அவரது ஜெஸ்ஸி எண்ணாகவும், அவரது பிறந்தநாள் தேதியாகவும் உள்ளதுதான். இந்திய அணியில் விளையாடும் போதும் சரி, ஐபிஎல்லில் சிஎஸ்கேவுக்காக விளையாடும்போது சரி 7 என்ற எண் கொண்ட ஜெர்சியை தான் தோனி அணிகிறார்.

தோனி ஓய்வு பெற்ற பிறகு பிசிசிஐ அவரது ஜெர்சி எண்ணுக்கும் ஓய்வு கொடுத்தது. தற்போது இந்த எண் அவரது வீட்டை அலங்கரித்துள்ளது. ராஞ்சியில் உள்ள அவரது இல்லத்தில் 7 என்ற எண் இணைக்கப்பட்டுள்ளது. இது தவிர, தோனியின் சில தனித்துவமான ஷாட்டுகள் மற்றும் விக்கெட் கீப்பிங் செயல்களைக் கொண்ட ஒரு சுவரும் உள்ளது, அதில் பிரபலமான ஹெலிகாப்டர் ஷாட்டும் அடங்கும். இந்த வீடு இப்போது ரசிகர்களுக்கு ஒரு செல்ஃபி ஸ்பாட்டாக மாறியுள்ளது.

தோனி வீடு

ஜார்க்கண்ட் மாநில வீட்டுவசதி வாரியம் 2009 ஆம் ஆண்டு தோனிக்கு வீடு கட்ட நிலத்தை வழங்கியது. பிறகு முன்னாள் இந்திய கேப்டன் தோனி அரசு தனக்கு ஒதுக்கப்பட்ட நிலத்திற்கு அருகில் ஒரு நிலத்தை வாங்கி வீட்டைக் கட்டினார், அதற்கு சௌர்யா என்று பெயரிட்டார். தோனி தற்போது ராஞ்சியின் சிமாலியாவில் உள்ள தனது பண்ணை வீட்டில் வசிக்கிறார்.

தோனியும் 7 என்ற எண்ணும்

7 என்பது அவரது ஜெர்சி எண்ணாக இருப்பதைத் தவிர, தோனிக்கு 7 என்ற எண்ணுடன் இன்னும் சில தொடர்புகள் உள்ளன. அவரது பிறந்த நாள் ஜூலை 7 மற்றும் அந்த மாதம் ஆண்டின் 7வது மாதமாகும். முன்னாள் இந்திய கேப்டனுக்கு ‘SEVEN’ என்றும் பெயரிடப்பட்ட ஒரு பிராண்டும் உள்ளது.!

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.