‘தண்டேல்’ படம் பார்த்த நாகார்ஜுனா படக்குழுவினரையும், மகன் நாக சைதன்யாவையும் பாராட்டி இருக்கிறார்.
கடந்த 2021ம் ஆண்டு நாக சைதன்யா – சாய் பல்லவி நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘லவ் ஸ்டோரி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சந்தூ மொண்டேடி இயக்கத்தில் ‘தண்டேல்’ படத்தில் மீண்டும் இருவரும் இணைந்து நடித்திருக்கின்றனர். இப்படத்துக்குத் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கிறார். கடந்த வாரம் வெளியான ‘தண்டேல்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
![தண்டேல்](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/8rs0ab68e625x30008February25.jpg)
இந்நிலையில் இப்படத்தைப் பார்த்த நாகார்ஜுனா படக்குழுவினரையும், மகன் நாக சைதன்யாவையும் பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருந்த பதிவில், “நாக சைதன்யா உன்னை நினைத்துப் பெருமைப்படுகிறேன். பல்வேறு சவால்களை எதிர்கொண்டு கலைக்கு நீ ஆற்றும் அர்ப்பணிப்பை என்னால் பார்க்க முடிகிறது. ‘தண்டேல்’ ஒரு சாதாரண படமல்ல.
உனது ஆர்வத்திற்கும், பெரிய கனவுகளைக் காணும் துணிவுக்கும், உன் கடுமையான உழைப்புக்கும் ஒரு சாட்சி. ‘தண்டேல்’ படத்தின் வெற்றியில் ரசிகர்களுக்கும் பங்குண்டு. உங்கள் முடிவில்லாத அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.
Dear @chay_akkineni, Proud of you my son!❤️ I have watched you push boundaries, face challenges, and give your heart to the craft. Thandel is not just another film—it is a testament to your relentless passion, your courage to dream big, and your hard work. ✨ ✨ ❤️
To all… pic.twitter.com/cE9u2EKaTn
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) February 9, 2025
அல்லு அரவிந்த் மற்றும் பன்னி ஆகியோருக்குப் பெரிய நன்றி. இந்த தருணத்தை மாற்ற முடியாதவையாக ஆக்கியதற்கு அற்புதமான திறமை கொண்ட சாய் பல்லவி, இனிய திறமைமிக்க தேவி ஸ்ரீபிரசாத், புது நட்சத்திர இயக்குநர் சந்து மொண்டட்டி மற்றும் அற்புதமான ‘தண்டேல்’ படக்குழு அனைவருக்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs