`எனக்கு இதுல செலவு கம்மிதான்…' – தினமும் விமானத்தில் வேலைக்குச் செல்லும் இந்திய வம்சாவளி பெண்

அன்றாட வேலைக்கு பேருந்து, ஆட்டோ, பைக், காரில் சென்றுவருவதற்கே, அப்பாடா என ஒருகணம் பெருமூச்சு விடும் நம்மில், யாராவது தினமும் விமானத்தில் வேலைக்கு செல்வார்கள் என்று நினைத்திருக்கக் கூட மாட்டோம். ஆனால், ஒரு பெண்மணி தினமும் விமானத்தில் வேலைக்குச் சென்று வருகிறார் என்பதை நம்ப முடிகிறதா?

மலேசியாவைச் சேர்ந்த ரேச்சல் கவுர்தான் அந்தப் பெண். இந்தியா வம்சாவளியான இவர், ஏர் ஏசியா (AIr Asia) நிறுவனத்தின் நிதித் துறையில் அசிஸ்டென்ட் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். ஆரம்பத்தில் தனது நிறுவனம் இருக்கும் இடமான குலா லம்பூரில் (Kuala Lumpur) வீடு எடுத்துத் தங்கி வேலைக்குச் சென்று வந்தார்.

விமானம் – வெளிநாடு

இருப்பினும், இவரது வீடு இருக்கும் பினாங்கிற்கும் (Penang), அலுவலகம் இருக்கும் குலா லம்பூருக்கும் இடையிலான 353 கி.மீ தொலைவு, தன் குழந்தைகளை அவர் மிஸ் பண்ணுவதை உணர்த்தியது. அதனால், வேலையையும் குடும்ப வாழ்க்கையையும் பேலன்ஸ் செய்ய அவர் கண்டுபிடித்த வழிதான் தினமும், பினாங்கிலிருந்து குலா லம்பூருக்கு விமானத்தில் வேலைக்குச் சென்று வருவது.

ஆங்கில ஊடகத்துடன் இதுபற்றி பகிர்ந்த ரேச்சல் கவுர், ”எனக்கு இரண்டு குழந்தைகள். ஒருவருக்கு 12 வயது, இன்னொருவருக்கு 11 வயது. இருவரும் வளர்ந்துவரும் இந்த நேரத்தில் ஒரு தாயாக அவர்களுடன் இருக்க வேண்டும் என்று உணர்ந்தேன். அதனால், வாரத்தில் 5 நாள்கள் இப்படி வேலைக்குச் சென்று வருகிறேன். இதனால், என்னுடைய குழந்தைகளோடு தினமும் நேரத்தை செலவிட முடிகிறது.” என்று கூறியவர், இதை நீண்ட காலமாகவெல்லாம் செய்யவில்லையெனவும், 2024-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்துதான் இப்படிச் சென்றுவருவதகவும் தெரிவித்தார். மேலும், இவ்வாறு சென்றுவருவதன் மூலம், தனது தனிப்பட்ட வாழ்க்கையையும், தொழில் வாழ்க்கையையும் சிறப்பாக பேலன்ஸ் ஆகிறது என்றும் அவர் கூறினார்.

ரேச்சல் கவுர்

இவ்வாறு விமானத்தில் வேலைக்கு சென்று வருவதற்கு, தினமும் காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து ரெடியாகி, 5 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி, 5.55 மணிக்கு விமான நிலையம் சென்றடைந்து, விமானத்தில் ஏறுவதற்கான நடைமுறைகளை முடித்துவிட்டு விமானத்தில் அமர்ந்ததும் ஆஃபீஸ்தான் நெக்ஸ்ட் ஸ்டாப். பிறகு வேலையை முடித்துவிட்டு, இரவு 8 மணிக்கெல்லாம் வீட்டிற்குத் திரும்பிவிடுவாராம்.

‘அதெல்லாம் சரி… விமானதுத்துல போயிட்டு வாரங்களே காசு என்ன ஆகுறது’ என்பது தானே உங்கள் மைண்ட் வாய்ஸ். இதுபற்றி பேசிய ரேச்சல் கவுர், “ஆரம்பத்தில் குலா லம்பூரில் வீடு எடுத்து தங்கியிருந்தபோது மாதம் ரூ. 41,000 செலவானது. ஆனால், இப்போது பயணச் செலவு ரூ. 27,000 மட்டும் தான் ஆகிறது. அதுமட்டுமல்லாமல், வர்க் ஃப்ரம் ஹோம் எடுத்து வேலை பார்ப்பதற்கு, தினமும் பயணித்து சென்று மனிதர்களுடன் வேலை பார்ப்பது நன்றாக உள்ளது” என்று கூறினார்.

வேலைக்காக நீங்கள் இப்படி தினமும் பயணம் செய்வீர்களா மக்களே…?!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.