ஓலா ரோட்ஸ்டர் X+ எலக்ட்ரிக் பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள் – Ola Roadster X+ Electric bike onroad price, range and specs

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் சந்தையில் வந்துள்ள புதிய ரோட்ஸ்டர் எக்ஸ் பிளஸ் பைக்கில் 4.5kwh மற்றும் 9.1kwh என இரண்டு வித பேட்டரி மாடல்களின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் முக்கிய சிறப்பு அம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

Ola Roadster X+

மிகவும் நவீனத்துவமான டிசைனை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள எலக்ட்ரிக் பைக் மாடலான ஓலா ரோட்ஸ்டரின் பிளஸ் மாடலில் எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் உடன் பிரேக் பை வயர் நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பெற்று 4.3 அங்குல எல்சிடி கிளஸ்ட்டர் உள்ளது.

4680 பாரத் செல் பெறுகின்ற ரோட்ஸ்டர் X+ 9.1Kwh பேட்டரி கொண்ட மாடல் 0-40 கிமீ வேகத்தை 2.7 விநாடிகளில் எட்டுகின்ற நிலையில் அதிகபட்சமாக 11KW(14.75hp) பவர் வெளிப்படுத்தும் நிலையில் அதிகபட்ச வேகம் மணிக்கு 125 கிமீ கொண்டு முழுமையான சார்ஜிங் நிலையில் 501 கிமீ வழங்கும் என IDC சான்றிதழ் பெற்றுள்ளது. ஸ்போர்ட்ஸ், நார்மல் மற்றும் ஈக்கோ 3 விதமான ரைடிங் மோடுகளை பெற்று உண்மையான நிகழ்நேரத்தில் 430-440 கிமீ பயணிக்கலாம். 0-80 % சார்ஜ் ஏற 8 மணி நேரம் போதுமானதாகும்.

0-40 கிமீ வேகத்தை 2.7 விநாடிகளில் எட்டுகின்ற ரோட்ஸ்டர் X+  4.5Kwh பேட்டரி கொண்ட மாடலில் அதிகபட்சமாக 11KW (14.75hp) பவர் வெளிப்படுத்தும் நிலையில் அதிகபட்ச வேகம் மணிக்கு 125 கிமீ கொண்டு முழுமையான சார்ஜிங் நிலையில் 252 கிமீ வழங்கும் என IDC சான்றிதழ் வழங்கப்பட்டு ஸ்போர்ட்ஸ், நார்மல் மற்றும் ஈக்கோ என 3 விதமான ரைடிங் மோடுகளை பெற்று உண்மையான நிகழ்நேரத்தில் 190-200 கிமீ பயணிக்கலாம். 0-80 % சார்ஜ் ஏற 5.9 மணி நேரம் தேவைப்படுகின்றது.

மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் முன்புறத்தில் டிஸ்க் மற்றும் டிரம் பிரேக்குடன், 2015 மிமீ நீளம், 831 மிமீ அகலம், 1235 மிமீ உயரத்துடன் 180மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்று 1301.9 மிமீ வீல்பேஸ் பெற்று 80/100-18 மற்றும் பின்புறத்தில் 110/80-17 டயருடன் சஸ்பென்ஷன் அமைப்பில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் உடன் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பர் கொண்டுள்ளது.

4.3 அங்குல எல்சிடி டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்று ரைடிங் மோடுகள், மேம்ப் வசதிகள் , கால், எஸ்எம்எஸ் அலர்ட், ரிவர்ஸ் மோடு, ரோடு டிரிப் வசதி வழங்கப்படுகின்றது. மூன்று வருடம் அல்லது 40,000 கிமீ வாரண்டி வழங்கப்படும் நிலையில் கூடுலாக நீட்டிக்கப்பட்ட வாரண்டி 8 ஆண்டு அல்லது 1,25,000 கிமீ வரை பெற ரூ.14,999 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.

  • Ola Roadster X+ 4.5kWh – ₹ 1,19,999
  • Ola Roadster X+ 9.1kWh – ₹ 1,69,999

(ex-showroom)

ola roadster x plus rear

2025 Ola Roadster X+ electric Scooter on-Road Price in Tamil Nadu

2025 ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் பிளஸ் இ பைக்கில் உள்ள 9.1Kwh மற்றும் 4.5kwh ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர், புதுச்சேரி மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • Ola Roadster X+ 4.5kWh – ₹ 1,40,681
  • Ola Roadster X+ 9.1kWh – ₹ 1,92,609

(All Price on-road Tamil Nadu)

  • Ola Roadster X+ 4.5kWh – ₹ 1,40,675
  • Ola Roadster X+ 9.1kWh – ₹ 1,92,609

(All Price on-road Pondicherry)

2025 ஓலா ரோட்ஸடர் எக்ஸ் பிளஸ் நுட்பவிபரங்கள்

Ola Roadster X+ Specs  4.5kwh/9.1Kwh
மோட்டார்
வகை எலக்ட்ரிக்
மோட்டார் வகை மிட் டிரைவ் IPM மோட்டார்
பேட்டரி 4.5kwh/9.1kwh Lithium ion
அதிகபட்ச வேகம் 125km/h
அதிகபட்ச பவர் 11kw
அதிகபட்ச டார்க்
அதிகபட்ச ரேஞ்சு 252/501 km per charge (IDC Claimed)
சார்ஜிங் நேரம் 8 மணி நேரம் (0-80%)/6 மணி நேரம் (0-80%)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் டபூள்கார்டிள் ஃபிரேம்
டிரான்ஸ்மிஷன் ஆட்டோமேட்டிக்
ரைடிங் மோட் Sports, Normal & Eco
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக்
பின்பக்கம் ட்வீன் ஷாக் அப்சார்பர்
பிரேக்
முன்புறம் டிஸ்க்
பின்புறம் டிரம்
வீல் & டயர்
சக்கர வகை அலாய்
முன்புற டயர் 80/100-18  ட்யூப்லெஸ்
பின்புற டயர் 110/80-17  / 100/90-17 ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
ஹெட்லைட் எல்இடி
சார்ஜர் வகை Portable 750W
கிளஸ்ட்டர் 4.3 LCD டிஜிட்டல் கிளஸ்ட்டர்
பரிமாணங்கள்
நீளம் 2,015 mm
அகலம் 831 mm
உயரம் 1235 mm
வீல்பேஸ் 1301.9 mm
இருக்கை உயரம் 777 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 180 mm
பூட் கொள்ளளவு 3.27 Litre
எடை (Kerb) 123 kg/130.4 kg

ஓலா ரோட்ஸ்டெர் எக்ஸ் பிளஸ் ஸ்கூட்டரின் நிறங்கள்

சில்வர், ஜெட் கருப்பு, வெள்ளை, நீலம், பச்சை, அன்தராசைட் என 5 விதமான நிறங்களை ரோட்ஸ்டர் எக்ஸ்+ மின்சார பைக் பெற்றுள்ளது.

Ola Roadster X+ Rivals

ஓலாவின் ரோட்ஸ்டர் எக்ஸ்+ பைக்கிற்கு போட்டியாக ஓபென் ரோர், ரிவோல்ட் ஆர்வி400 உள்ளிட்ட மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றது.

Faq ஓலா ரோட்ஸ்டெர் எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஓலா ரோட்ஸ்டர் X+ பைக்கின் பேட்டரி விபரம் ?

ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் பிளஸ் பைக்கில் 4.5kwh, மற்றும் 9.1kwh என வித பேட்டரி ஆப்ஷன் உள்ளது.

ஓலா ரோட்ஸ்டர் X+ பைக்கின் ரேஞ்ச் விபரம் ?

ரோட்ஸ்டர் எக்ஸ் பிளஸ் 4.5kwh பெற்ற மாடல் 252 கிமீ மற்றும் 9.1Kwh மாடல் 501 கிமீ ரேஞ்ச் ஆகும்.

ஓலா ரோட்ஸ்டர் X+ பைக்கின் ஆன் ரோடு விலை எவ்வளவு?

ஓலாவின் ரோட்ஸ்டர் X+ பைக்கின் ஆன்ரோடு விலை ரூ.1.41 லட்சம் முதல் ரூ.1.94 லட்சம் வரை அமைந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.