இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 2 போட்டிகள் முடிவடைந்துள்ளது. 2 போட்டிகளிலுமே இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றி உள்ளது. இத்தொடரை இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியின் முன்னோட்டமாகவே அனுகி வருகிறது.
குறிப்பாக பேட்டிங்கில் முக்கிய பரிசோதனைகளை செய்து வருகிறது இந்திய அணி. அதன்படி கே.எல்.ராகுல் இறங்க வேண்டிய ஐந்தாம் வரிசையில் அக்சர் பட்டேல் இறக்கப்பட்டு வருகிறார். அக்சரும் சிறப்பாகவே விளையாடினார்.
முதல் போட்டியில் அரை சதமும், இரண்டும் போட்டியில் 41 ரன்களும் சேர்த்திருந்தார். ஆனால் கே.எல்.ராகுல் பெரிதாக ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. இது பல்வேறு தரப்பினரிடம் இருந்து விமர்சனங்களை கிளப்பி வருகிறது. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் விமர்சகருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இது குறித்து பேசி உள்ளார்.
மேலும் படிங்க: ரோஹித் சர்மா ஓய்வு… உள்ளே வரும் இந்த 2 முக்கிய வீரர்கள் – இந்திய அணியின் பிளேயிங் XI மாற்றம்!
கே.எல்.ராகுலுக்கு நடப்பது நியாயம் இல்லை
அவர், கூறியதாவது, தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் நல்ல ஃபார்மில் இருக்கிறார். அது இந்திய அணிக்கு நல்ல விஷயம். ஆனால் எனது கவலை கே.எல்.ராகுல் பற்றியதுதான். அக்சர் பட்டேல் 30, 40 ரன்கள் அடிக்கிறார். அது நல்ல விஷயம்தான். ஆனால் ஐந்தாம் வரிசையில் கே.எல்.ராகுலின் ரெக்கார்டை எடுத்து பார்க்க வேண்டும். அவர் அந்த வரிசையில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். கே.எல்.ராகுலுக்கு நடப்பது நியாயமே இல்லை என்றார்.
இந்த வியூகம் எப்போதும் பலிக்காது
தொடர்ந்து பேசிய அவர், கெளதம் கம்பீர் செய்வது சரி இல்லை. சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு இது போன்ற மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அக்சர் பட்டேலை ஐந்தாம் வரிசையில் களம் இறக்குகிறீர்கள். ஆனால் இது நிலையான வியூகமாக இருக்க முடியாது. இது போன்ற மாற்றங்களை தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியும். முக்கியமான போட்டியின் போது எல்லாமே சொதப்பிவிடும்.
அக்சர் பட்டேலை ஐந்தால் வரிசையில் விளையாட வைப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அதை அக்சரும் சரியாக பயன்படுத்திக் கொள்கிறார். ஆனால் ஆறாம் இடத்தில் கே.எல்.ராகுலை இறக்குவதற்கு பதிலாக ரிஷப் பண்டை களம் இறக்கலாம். நீங்கள் கே.எல்.ராகுலின் தன்னம்பிக்கையை உடைக்கிறீர்கள். சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் வீரருக்கு இப்படி செய்வது சரி இல்லை என ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
மேலும் படிங்க: சிஎஸ்கே ரசிகர்கள் குஷியோ குஷி! பார்மிற்கு வந்த முக்கிய வீரர்! இனி அதிரடி தான்!