வாஷிங்டன்,
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்பு, பல்வேறு அதிரடிகளை காட்டி வருகிறார்.கடந்த வாரம் இஸ்ரேல் பிரதமருடனான செய்தியாளர்கள் சந்திப்பின் போது டிரம்ப் காசா விவகாரம் குறித்து அதிரடியாக பேசினார். டிரம்ப் கூறுகையில், “அமெரிக்கா காசா பகுதியைக் கைப்பற்றும். மேலும், நாங்கள் அதை சொந்தமாக்கிக் கொள்வோம். காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள். காசாவில் உள்ள வெடிக்காத ஆபத்தான அனைத்து குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களை அகற்றுவதற்கு நாங்கள் பொறுப்பேற்போம்” என்றார்.
காசாவை தனது கட்டுப்பாட்டில் எடுக்கப்போவதாக கடந்த வாரத்தில் அறிவித்த டிரம்ப், தற்போது பாலஸ்தீனியர்கள் மீண்டும் காசாவில் குடியேற உரிமையில்லை என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.நேற்று ஒரு டி.வி. நிறுவனத்துக்கு பேட்டி அளித்தபோது, காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் அந்தப் பகுதிக்குத் திரும்ப உரிமை உள்ளதா என்று கேட்கப்பட்டது. ”அரபு நாடுகள், குறிப்பாக அமெரிக்க நட்பு நாடுகளான ஜோர்டான் மற்றும் எகிப்து, காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களை அழைத்துச் செல்ல அழுத்தம் கொடுத்து வருவதால் இது நடந்து வருகிறது.
”நாங்கள் பாதுகாப்பான சமூகங்களை உருவாக்குவோம், அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து சிறிது தொலைவில், ”இடைக்கால” காலத்திற்கு மட்டுமே பாலஸ்தீனியர்களை காசாவில் இருந்து இடம்பெயர அனுமதிப்போம். அவர்கள் மீண்டும் காசாவில் குடியேற உரிமையில்லை.” என்று டிரம்ப் கூறினார்.