நியூசிலாந்து அணியின் முன்னாள் அதிரடி வீரர் மார்ட்டின் கப்டில். இவர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை பெற்றார். இந்த நிலையில், லெஜண்ட் 90 வாரியர்ஸ் என்ற 15 ஓவர் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் சத்தீஸ்கர் வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில், பிக் பாய்ஸ் உனிகாரி – சத்தீஸ்கர் வாரியர்ஸ் அணிக்களுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்டில் அதிரடியாக விளையாடி அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.
இப்போட்டியில் முதலில் சத்தீஸ்கர் வாரியர்ஸ் அணியே பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க வீரர்களாக ரிஷி தவான் மற்றும் மார்ட்டின் கப்டில் களம் இறங்கிய நிலையில், இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 15 ஓவரில் 240 ரன்கள் அடித்து இருவரும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டி20 240 ரன்கள் அடிப்பதே அவ்வபோது தான் நடக்கும். ஆனால் 15 ஓவரிலேயே 240 ரன்கள் என்ற நம்பமுடியாத ரன்களை அடித்தனர்.
இதில் ரிஷி தவான் 42 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். மறுபுறம் மார்ட்டின் கப்டில் 49 பந்துகளில் 160 ரன்கள் எடுத்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 326.53 ஆக இருந்தது. இப்போட்டியில் மட்டும் அவர் 16 சிக்சர்கள் மற்றும் 12 ஃபோர்களை அடித்தார். 49 பந்துகளில் 160 ரன்கள் அடித்தது மட்டுமல்லாமல் ஆட்டமிழக்காமல் ரசிகர்களுக்கு இடையே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிக் பாய்ஸ் அணியின் பந்து வீச்சாளர் இஷான் மல்கோத்ரா அதிகபட்சமாக ஒரு ஓவரில் 29 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
இதையடுத்து களம் இறங்கிய பிக் பாய்ஸ் உனிகாரி 15 ஓவர் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 151 ரன்கள் அடித்து 90 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தனர். அதிகபட்சமாக அந்த அணியின் வீரர் ராபின் பிஸ்ட் 33 பந்துகளில் 55 ரன்களும் சவுவ் திவாரி 37 ரன்களும் சேர்த்தனர்.
மேலும் படிங்க: கே.எல்.ராகுலுக்கு நடப்பது சரி இல்லை.. கம்பீரை எச்சரித்த இந்திய முன்னாள் வீரர்!
மேலும் படிங்க: சிஎஸ்கே ரசிகர்கள் குஷியோ குஷி! பார்மிற்கு வந்த முக்கிய வீரர்! இனி அதிரடி தான்!