இரண்டு வருடங்களுக்குப் பிறகு அஜித் நடிப்பில் கடந்த வாரம் ‘விடாமுயற்சி’ திரைப்படம் வெளியாகி இருந்தது.
இதனைத் தொடர்ந்து அவரது நடிப்பில் ‘குட் பேட் அக்லி’ படம் வெளியாக இருக்கிறது. ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ‘குட் பேட் அக்லி’ படத்தை அடுத்து சிறுத்தை சிவாவுடனும், விஷ்ணுவர்தனுடனும் அஜித் இணைய இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/akkkew.jpg)
இந்நிலையில் சென்னை ராமாபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விஷ்ணுவர்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டிருந்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் ‘பில்லா’ கூட்டணி மீண்டும் இணைய இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் உறுதியாகவில்லை. உறுதியானவுடன் அறிவிப்போம்” என்று கூறியிருக்கிறார். அஜித் – விஷ்ணுவர்தன் கூட்டணியில் ‘பில்லா’, ‘ஆரம்பம்’ ஆகிய இரண்டு படங்கள் வெளியாகியுள்ளது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/vishnu_vardhan_to_direct_siddharth_malhotra_in_his_next_photos_pictures_stills.jpg)
அஜித் அடுத்து எந்த இயக்குநருடன் இணைந்து படம் பண்ணவேண்டும் என்பது உங்கள் விருப்பம் என்பதைக் கமென்ட்டில் பதிவிடுங்கள்!