நடிகர் கார்த்தி இன்று (பிப் 11) குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்
அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், “ரொம்ப வருஷம் ஆச்சு திருப்பதிக்கு வந்து. என் பையன் பிறந்ததற்குப் பிறகு வரணும்னு நினைச்சோம். ஆனா, வர முடியல. அதனால இப்போ குடும்பத்தோட வந்து சாமி தரிசனம் செய்திருக்கிறோம்” என்றார். இதையடுத்து தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்துப் பேசியவர், ” ‘வா வாத்தியார்’ படம் அடுத்துத் திரைக்கு வரவிருக்கிறது. அதையடுத்து ‘கைதி 2’, ‘சர்தார் -2’ என வரிசையாக படங்கள் இருக்கு. அதற்காகப் பணிகள் நடந்து வருகிறது” என்று கூறியிருக்கிறார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/Kaithi.jfif.jpeg)
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து முடித்திருக்கும் ‘வா வாத்தியார்’ படம் ரிலீஸ் தேதி தாமதமாகிக் கொண்டிக்கிறது. ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’, ‘கூலி’ என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விஜய், கமல், ரஜினி என கோலிவுட்டின் உச்சத்தில் இருக்கிறார்.
அவரின் திரையுலக வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது ‘கைதி’ திரைப்படம்தான். பெரும் வரவேற்பைப் பெற்ற அத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/DSC1297-min.jfif.jpeg)
ரஜினி உடனான ‘கூலி’ படத்தை முடித்தக் கையோடு ‘கைதி -2’ வை லோகேஷ் எடுக்கவிருக்கிறார். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் கார்த்திக்கு அடுத்தடுத்த லைன் அப்கள் சிறப்பாக அமைந்திருக்கின்றன.