‘ராயன்’ படத்துக்குப் பிறகு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கி இருக்கிறார் தனுஷ்.
இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடித்திருக்கிறார். தவிர மாத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்களும், டிரைலரும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/Poster-of-Nilavukku-Enmel-Ennadi-Kobam.jpg)
இந்த நிகழ்ச்சியில் S.J சூர்யா கலந்துக்கொண்டிருக்கிறார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “ ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை நான் பார்த்துவிட்டேன். படம் நன்றாக வந்திருக்கிறது. டிரைலரில் ‘ஜாலியா வாங்க ஜாலியா போங்க’ என்று சொன்னது மாதிரியே இந்தப் படம் இருக்கும். இன்டஸ்ட்ரிக்கு நிறைய புதுமுக நடிகர்கள் வேண்டும். புது நடிகர்கள் பற்றாக்குறை இருந்துகொண்டேதான் இருக்கிறது. தற்போது தனுஷ் சார் ஒரு பட்டாளத்தையே தயார் செய்து அனுப்பி வைத்திருக்கிறார்.
இந்தப் படத்தில் நடித்த எல்லோரிடமும் சரியான வேலையை வாங்கி இருக்கிறார். அருமையான கதைக்களம். ஒரு சமயத்தில் பாலசந்தர் சாரும், அனந்த் சாரும் இணைந்து ஒரு மிகப்பெரிய விஷயத்தை படத்தில் செய்வார்கள். அதை தனுஷ் சார் தனியொருவராகவே செய்திருக்கிறார். இன்றைக்கு இருக்கக்கூடிய இளைய தலைமுறையினரின் எமோஷன்களை மிகவும் அற்புதமாக எடுத்திருக்கிறார்.
ராயனிற்குப் பிறகு எப்படி அவரால் இப்படி ஒரு விஷயத்தை செய்ய முடிந்தது என்று எனக்குத் தெரியவில்லை. தயாரிப்பு, இயக்கம், நடிப்பு என எல்லாவற்றையும் மிகவும் அசாதரணமாக செய்கிறார். உங்களது இயக்கத்தில் வெளியாகும் இந்தப் படத்திற்கு வாழ்த்துகள் தனுஷ் சார். இதில் எல்லோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். Gen Z கிட்ஸ்கான ஒரு படம் இது. ஜி.வி பிரகாஷும் அற்புதமாக இசையமைத்திருக்கிறார்” என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…