நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இன்று (11/02/2025) மாலையில் தனது கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும், அதனை மீட்கும் வரை பதிவிடப்படும் எதுவும் தான் பதிவிடுவது அல்ல என்றும் கூறியுள்ளார்.
த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் 60 லட்சம் ஃபாலோவர்கள் உள்ளனர். ஹேக் செய்யப்பட்ட கணக்கில் கிரிப்டோகரன்சி தொடர்பான பதிவு வெளியாகியிருக்கிறது. சில நிமிடங்களிலேயே அந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது.
“முதல் முறையாக இதுபோன்ற ஒன்றைச் செய்வதில் நான் உற்சாகமடைகிறேன். நான் எனது சொந்த கிரிப்டோகரன்சியை உருவாக்கி உள்ளேன். இப்போது அது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. லவ் யூ ஆல்…” என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் லின்க் ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/ற்றிஷா.jpeg)
இதே போல மற்றொரு பதிவும் வெளியிடப்பட்டு நீக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பதிவுகள் குறித்து இன்ஸ்டாகிராமில் விளக்கமளித்துள்ளார் த்ரிஷா.
அவரது இஸ்டாகிராம் ஸ்டோரியில், “என்னுடைய ட்விட்டர் ஹேக் செய்யப்பட்டுள்ளது. மீட்கும் வரை அதில் பதிவிடப்படும் எதுவும் நான் பதிவிடுவதில்லை. நன்றி” எனப் பதிவிட்டிருந்தார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/த்ரிஷா.jpeg)
சமீபத்தில் த்ரிஷா மற்றும் அஜித் நடிப்பில் விடாமுயற்ச்சி திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிவருகிறது. இதுபோல லைம் லைட்டில் இருக்கும் பிரபலங்களின் கணக்குகள் அடிக்கடி ஹேக் செய்யப்பட்டு வருகின்றன.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…