‘‘தொடர்ந்து ஒரே வீட்ல திருடுறியே, ஏன்..?’’
‘‘புதுசா இப்ப ‘ஒரே வீடு ஒரே திருட்டு’ திட்டத்தைத் தொடங்கியிருக்கேன் யுவர் ஆனர்..!’’
– சென்னா
– திருப்பூர் சாரதி
“அரசியல் பேசப் போன தலைவரை கூட்டணித் தலைவர் மரியாதை இல்லாமல் பேசிட்டாருன்னு எப்படிச் சொல்றே?!”
“இது மரியாதை நிமித்தமில்லாத சந்திப்புன்னு அறிக்கை விடுறாரே!”
– எம்.கல்லூரி ராமன்
‘‘புதுசா பிசினஸ் தொடங்கப் போறதா நான் சொன்னப்ப, இந்த ஊர்ல நிறைய பேர் தங்களோட நகைகளை அடகு வச்சு உதவினாங்க!’’
‘‘ஆச்சரியமா இருக்கே, அப்படி என்னய்யா பிசினஸ் பண்ணுன?!’’
‘‘அடகுக் கடை பிசினஸ்தான்!’’
– மேல்மங்கலம் பத்ரா











