அகமதாபாத்,
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
இதையடுத்து தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் 2 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கைப்பற்றி விட்டது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நாளை நடைபெற உள்ளது. நாளை நடைபெறும் ஆட்டத்திலும் இங்கிலாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய இந்தியா முனைப்பு காட்டும்.
அதேவேளையில் நாளைய ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பதிவு செய்ய இங்கிலாந்து கடுமையாக போராடும். இதனால் நாளைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.