3 பெண்களின் வருமானத்தில் வாழும் ஜப்பானியர்: 54 குழந்தைகள் பெற்றுக் கொள்ள விருப்பம்

திருமணம் செய்யாமல் பல பெண்களின் வருமானத்தில் ஜாலி வாழ்க்கை வாழும் ஜப்பானியருக்கு 54 குழந்தைகள் பெற்று சாதிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஜப்பானைச் சேரந்தவர் ரூய்டா வாட்டாநபே(36). பள்ளிப் படிப்பை கைவிட்ட இவர், 3 ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பகுதி நேர வேலை செய்துள்ளார். இவர் சமூக ஊடகத்தில் பிரபலமான ‘ஹிமோ ஒடோகோ’. அப்படியென்றால் ஜப்பான் மொழியில் பெண்களின் வருமானத்தை சார்ந்திருக்கும் நபர்.

இவர் பார்க்க ‘அமுல் பேபி’ போல இருப்பார். கலகலப்பாக பேசக்கூடிய நபர் என்பதால், பெண்களின் மனம் கவர்ந்த நாயகனாக வலம் வந்துள்ளார். ஜப்பானில் பலதார மணத்துக்கு தடை உள்ளது. அதனால் இவர் 3 பெண்களுடன் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்துகிறார். இந்த 3 பெண்களின் வருமானத்தில் குடும்ப செலவை கவனித்துக் கொள்கிறார். இவருக்கு இரட்டையர் உட்பட 4 குழந்தைகள் உள்ளன.

இவருடன் தொடர்பில் உள்ள 4-வது பெண் தனியாக வசிக்கிறார். ரூய்டா ஏற்கெனவே பல பெண்களுடன் ஜாலியாக சுற்றி திரிந்துள்ளார். அவர்கள் மூலம் இவர் மேலும் 7 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார். இவர் பல பெண்களுடன் வாழும் வாழ்க்கை முறையை சமூக ஊடகத்தில் வெளியிட்டு ஜப்பானில் பிரபலம் அடைந்துள்ளார். இதன் மூலமும் இவருக்கு பல லட்சம் வருமானம் கிடைக்கிறது.

ஜப்பானில் சோகன் டோக்குகாவா லெனாரி என்பவர் 53 குழந்தைகளுக்கு தந்தையாக இருப்பதுதான் அங்கு சாதனையாக இருந்து வந்தது. அந்த சாதனையை முறியடித்து 54-வது குழந்தைக்கு தந்தையாக வேண்டும் என்பதுதான் ரூய்டாவின் விருப்பமாம்.

இவரது வாழ்க்கை முறையை சமூக ஊடகத்தில் பலர் ரசிக்கின்றனர். பலர் விமர்சித்து வருகின்றனர். திருமணம் செய்யாமல் குழந்தைகள் பெற்றுக் கொள்ள விரும்பும் இந்த நபர், கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பெண்களுக்கு நல்ல துணையாக இருப்பாரா என்பது ஆச்சர்யம்தான் என ஒருவர் கூறியுள்ளார். இவரது குழந்தைகள் வளர்ந்தபின் விமர்சனங்களை சந்திக்கும், அவர்கள் தங்கள் குடும்பத்தை வினோதமாக கருதுவார்கள் என மற்றொருவர் கூறியுள்ளார். இவரது வாழ்க்கை முறை அச்சுறுத்தலாக உள்ளது என 3-வது நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.