‘ராயன்’ படத்துக்குப் பிறகு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கி இருக்கிறார் தனுஷ்.
இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடித்திருக்கிறார். தவிர மாத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்களும், டிரைலரும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
![நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/Poster-of-Nilavukku-Enmel-Ennadi-Kobam-1.jpg)
அதில் நடிகர் அருண் விஜய் கலந்துகொண்டிருந்தார். அப்போது பேசிய அருண் விஜய், “ ‘இட்லி கடை’ சூட்டிங்கின்போது ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் டிரைலரை தனுஷ் சார் என்கிட்ட காட்டினாரு. அதைப் பார்த்துட்டு இந்தப் படம் யூத் ஜென்ரேஷனை பயங்கரமா கவரப்போதுன்னு அவர்கிட்ட சொன்னேன். தனுஷ் சார் பத்தி சொல்லணும்னா அவர் ஒரு மல்டி டாஸ்கர். ஷாட் முடிசிட்டுபோய் ஸ்கிரிப்ட் எழுதிட்டு இருப்பாரு. கேரவன்ல உட்கார்ந்து ஜி.வி சார் கூட டியூன் போடிட்டு இருப்பாரு.
அவருடைய இந்த ஆர்வத்தைப் பார்க்கும்போது ரொம்ப வியப்பாக இருக்கும். ராயன் படத்தைப் பார்த்தப் பிறகு அவரோட இயக்கத்தில நடிக்கணும்னு நினைச்சேன். அதுப்படி இட்லி கடையில நடிக்கிற வாய்ப்பு கிடைச்சது. இந்தப் படத்துல எல்லாப் பாடல்களும் நல்லா இருக்கு. புது புது நடிகர்களை இந்தப் படத்துல அறிமுகப்படுத்திருக்காரு. அவர்களை வாழ்த்தத்தான் நான் இங்க வந்தேன்.
பவிஷ் சினிமாவில என்ட்ரி ஆயிட்டிங்க. கவனம் செலுத்தி அன்போடு பண்ணீங்கனா நிச்சயமா சினிமா உங்களை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துட்டுபோகும். `என்னை அறிந்தால்’ படத்துல அனிகா என்னோடு குழைந்தை நட்சத்திரமா நடிச்சாங்க. இப்போ அவங்க ஒரு ஹீரோயினாக நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கு. ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படக்குழுவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…