ஆசிய கலப்பு அணிகள் பேட்மிண்டன்: இந்தியா காலிறுதிக்கு தகுதி

கியாங்டா,

ஆசிய கலப்பு அணிகளுக்கான பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள கியாங்டாவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.

இதன் ‘டி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் மக்காவை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 5-0 என்ற கணக்கில் மக்காவை தோற்கடித்து காலிறுதியை உறுதி செய்தது. சதீஷ், லக்ஷயா சென், மாள்விகா பான்சோத் ஆகியோர் ஒற்றையரிலும், சிராக் ஷெட்டி – எம்.ஆர். அர்ஜூன், திரிஷா ஜாலி- காயத்ரி ஆகிய ஜோடியினர் இரட்டையரிலும் இந்தியாவுக்கு நேர் செட்டில் வெற்றியை தேடித்தந்தனர்.

இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, வலுவான தென்கொரியாவை சந்திக்கிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.