ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை: ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டப் பொறுப்பாளராக அப்துல் வகாப் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: கட்சியின் நிர்வாக வசதிக்காகவும், கட்சிப் பணிகள் செம்மையுற நடைபெற்றிடவும் ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் மாற்றியமைக்கப்படுகிறது. அதோடு சில மாவட்டங்களுக்கு பின்வருமாறு புதிதாக பொறுப்பாளர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.

  • ஈரோடு தெற்கு – சு.முத்துசாமி
  • ஈரோடு வடக்கு – என்.நல்லசிவம்
  • ஈரோடு மத்திய மாவட்டம் – தோப்பு வெங்கடாசலம்
  • திருப்பூர் கிழக்கு – க.செல்வராஜ்
  • திருப்பூர் மேற்கு – மு.பெ.சாமிநாதன்
  • திருப்பூர் வடக்கு – என்.தினேஷ்குமார்
  • திருப்பூர் தெற்கு – இல.பத்மநாபன்
  • விழுப்புரம் வடக்கு – செஞ்சி மஸ்தான்
  • விழுப்புரம் தெற்கு – கவுதம சிகாமணி
  • விழுப்புரம் மத்திய மாவட்டம் – ஆர்.லட்சுமணன்
  • மதுரை வடக்கு – பி.மூர்த்தி
  • மதுரை மாநகர் – கோ.தளபதி, ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வரும் க. அண்ணாதுரை அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக பழனிவேல் நியமிக்கப்படுகிறார். நீலகிரி மாவட்டச் செயலாளராக பணியாற்றி வரும் பா.மு.முபாரக் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக கே.எம்.ராஜு நீலகிரி மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மத்திய மாவட்டப் பொறுப்பாளராக பணியாற்றி வரும் டி.பி.எம்.மைதீன்கான் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக மு.அப்துல்வகாப் நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வரும் டி.ஜெ.எஸ். கோவிந்தராஜன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் நியமிக்கப்படுகிறார். ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவர்களுடன் இணைந்து பணியாற்றிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.