சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கே 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை 750 மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவிக்கு அதே பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் 16 வயதுடைய 3 மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு பள்ளி வேலை நேரம் முடிந்த பின் மாலையில் பள்ளி வளாகத்துக்குள் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாணவியின் பெற்றோர் குழந்தைகள் உதவி மையத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மலர்கொடி இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்டார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2024/09/கைது.jpeg)
இது குறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, “ஆத்தூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிக்கு, அதே பள்ளியில் பயிலும் மூன்று மாணவர்கள் சேர்ந்து பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் வந்தது. கடந்த மாதம் 22ஆம் தேதி மாணவியை மூன்று மாணவர்களும் சேர்ந்து பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். நேற்று முன்தினம் பாதிக்கப்பட்ட மாணவியரிடம் விசாரணை நடத்திய போது உண்மை உறுதிப்படுத்தப்பட்டது. இதை அடுத்து மூன்று மாணவர்கள் மீதும் போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாணவியை சேலம் சிறுவர்கள் வரவேற்பு இல்லத்தில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்” என்றனர்.