பிரபலங்கள் இணையாததால் விரக்தியில் இருக்கிறாரா விஜய்?

தமிழக வெற்றிக் கழகத்தை விஜய் தொடங்கி ஒருவருடம் கடந்துவிட்ட நிலையில், அந்தக் கட்சிக்கு போதுமான வரவேற்பு இல்லை என்கின்றன விஜய்க்கு எதிரான கட்சிகள். ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், தனது அடுத்த கட்ட நகர்வு குறித்து பிரசாந்த் கிஷோரை கூட்டிவைத்து ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார் விஜய்.

பொதுவாக புதிதாக தொடங்​கப்​படும் கட்சிகளில் மாற்றுக் கட்சி நிர்வாகிகள், பிரபலங்கள், நடிகர்கள் தாமாக வந்து இணைவது வழக்கம். விஜயகாந்த் கட்சி தொடங்​கியபோது அப்படி பலர் இணைந்​தனர். கமல் கட்சி தொடங்​கிய​போதும்கூட பல முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், நடிகர்கள், தொழில​திபர்கள், பிரபலங்கள் அவரது மக்கள் நீதி மய்யத்தில் கலந்தனர்.

தவெக உதயமாகி ஒரு வருடம் ஆன பிறகும் அந்தக் கட்சியில் பெரிய அளவில் பிரபலங்கள் இணையவில்லை. இதனால்தான் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்​கு​மார், ராஜ்மோகன் ஆகியோர் தங்கள் பக்கம் வந்ததையே பெரும் கொண்டாட்​ட​மாக்​கினர் தவெக-​வினர்.

விஜய் அரசியலுக்கு வருகிறார் என்றதுமே அவரது கட்சியில் இணைய பலரும் தயாராகவே இருந்​தனர். ஆனால், கட்சியின் செயல் திட்டங்கள், கொள்கைகளை விஜய் அறிவித்த பிறகு அத்தனை பேரும் அமைதி​யாகி​விட்​டனர். முன்னுக்குப் பின்னான கொள்கை முழக்​கங்கள், கள அரசியலில் விஜய் இறங்காதது, புஸ்ஸி ஆனந்தின் ஆதிக்கம், கட்சியின் ஆமை வேக நகர்வுகள் இதெல்லாம் தான் அந்த அமைதிக்குக் காரணம்.

கட்சியை அறிவித்த கையோடு மாநாடு நடத்தி, நிர்வாகிகளை நியமித்து, விஜய் தடாலடியாக கள அரசியலில் இறங்கி​யிருந்தால் கட்சி சுறுசுறுப்பாக இருந்​திருக்​கும். ஆனால், கட்சி தொடங்கி ஓராண்டு கழித்துத்தான் மாவட்டச் செயலா​ளர்​களையே நியமிக்​கிறார் விஜய். அப்படி​யானால் எந்த நம்பிக்கையில் பிரபலங்கள் இவரோடு இணைவார்கள் என்ற கேள்வியையும் விமர்​சகர்கள் எழுப்பு​கிறார்கள்.

இன்னொரு பக்கம், திராவிடம், தமிழ்த் தேசியம், தலித்​தியம், மார்க்​சியம் என அனைத்​தையும் கலந்துகட்டி அடிப்​ப​தால், விஜய் என்ன மாதிரியான அரசியலை முன்னெடுப்பார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் உள்ளது. விஜய் கட்சியில் ஏன் பிரபலங்கள் இணையவில்லை என்பதற்கான பதிலும் இதுதான் என்கின்றனர் அரசியல் விமர்​சகர்கள். புதிய கட்சிகள் தோன்றும்போது உடனடியாக கிளைகள் அளவில் கொடிகள் பறக்கத் தொடங்​கும். ஆனால், அதுவும் தவெக-வுக்கு பெரிய அளவில் சாத்தி​ய​மாக​வில்லை.

தவெக-வில் பிரபலங்கள் இணையாததால் விஜய் விரக்​தியில் இருக்​கிறாரா என்று அக்கட்​சியின் கொள்கைபரப்பு இணைச் செயலாளர் லயோலா மணியிடம் கேட்டோம். “கடந்த ஆண்டு பிப்ர​வரியில் கட்சியை அறிவித்த போதே, ஒரு படத்தை முடித்து​விட்டு நேரடியாக அரசியல் களத்துக்கு வருவதாக சொல்லி​யிருந்தார் தலைவர்.

இடைப்பட்ட காலத்தில் கட்சியின் கட்டமைப்பை வலுப்​படுத்தி, 95 மாவட்டச் செயலா​ளர்கள், மாநில நிர்வாகிகளை நியமித்​துள்ளார். கட்சியின் உறுப்​பினர் சேர்க்கை 80 லட்சத்தை கடந்து​விட்டது. 2026 தேர்தலில் திமுக-வுக்கு மாற்றாக தவெக-வை மக்கள் நினைப்​ப​தாலேயே இது சாத்தி​ய​மாகி​யுள்ளது. இந்த மிகப்​பெரிய வரவேற்பால் தலைவர் மிக உற்சாக​மாகவே இருக்​கிறார்.

தவெக-வில் தங்களை இணைத்​துக்​கொள்ள ஆளும் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் விருப்பம் தெரிவித்​துள்ளனர். தவெக நிர்வாகிகள் நியமனத்​துக்கு பின்னர் தமிழகத்தில் காட்சிகள் மாறும், பல முக்கிய தலைவர்கள் எங்கள் கட்சியில் இணைவதைப் பார்ப்​பீர்கள்” என்றார் அவர்.

ஏப்ரல் அல்லது மே மாதத்தில் விஜய் தமிழகம் தழுவிய சுற்றுப் பயணத்தைத் தொடங்​க​விருப்​ப​தாகச் சொல்கிறார்கள். அந்த சமயத்தில் முக்கிய கட்சிகளை சேர்ந்த பிரபலங்கள் பலர் ​விஜய்​யுடன் கைகுலுக்​கலாம் என்​கிறார்​கள். ​பார்​க்​கலாம்​!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.