வீட்டு வசதி வாரியத்தால் எடுக்கப்பட்ட இடங்களில் வசிப்பவர்களுக்கு நிலத்தை விடுவிப்பது குறித்து ஆராய 2 பேர் குழு – அமைச்சர் தகவல்

சென்னை: வீட்டு வசதி வாரி​யத்​தால் எடுக்​கப்​பட்ட நிலங்​களின் உண்மை நிலை அறியாமல் அதை வாங்கி குடி​யிருப்​பவர்​களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அந்த நிலத்தை விடு​விப்பது தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வு​பெற்ற 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமை​யில் குழு அமைத்​துள்ள​தாக​வும், இக்குழு அளிக்​கும் பரிந்​துரை​யின்​பேரில் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்றும் அமைச்சர் சு.முத்​துசாமி தெரி​வித்​துள்ளார்.

இதுகுறித்து, அமைச்சர் சு.முத்​துசாமி நேற்று கூறிய​தாவது: வீட்டு​வசதி வாரி​யத்​தின் சார்​பில் 40 ஆண்டு​களுக்கு முன் இடங்கள் எடுக்​கப்​பட்டு, ஆரம்​பகட்ட பணியாக அதற்கான நோட்​டீஸ் மட்டும் வழங்​கப்​பட்​டுள்​ளது. அதன்பின் எந்த நடவடிக்கை​யும் அதில் எடுக்​கப்படவில்லை. இதுகுறித்த மனுக்கள் வந்த​போது, மக்​களுக்கு ஏற்பட்​டுள்ள சிரமங்களை சரிசெய்ய முதல்வர் ஸ்​டா​லின் உத்தர​விட்​டார்.

எனவே, இந்த மா​திரியான பிரச்​சினை உள்ள இடங்களை கண்டறிய வாரி​யத்​தின் சார்​பில் 16 இடங்​களில் புகார் பெட்​டிகளை வைத்து கோரிக்கைகள் பெறப்​பட்டன. இதன்​மீது வாரியமே இதில் நடவடிக்கை எடுப்பது பொருத்​தமாக இருக்​காது என்ப​தால், கமிட்டி அமைத்து பரிந்​துரை பெற முடி​வெடுக்​கப்​பட்​டது. இதுவரை நோட்​டீஸ் கொடுத்து வீட்டு​வசதி வாரியம் எடுத்​துள்ள நிலங்கள் 5 வகையாக பிரிக்​கப்​பட்டன.

ஐந்து வகைகளில், முதல் இரண்​டில் வாரியம் நோட்​டீஸ் அளித்​துள்ளதுடன், எந்த பணமும் கொடுக்காத அளவில் நிற்​கிறது. அதில் நிலத்தை திருப்​பிக் கொடுப்​ப​தில் பிரச்​சினை இல்லை என்ப​தால், நீதி​மன்ற வழக்​குகள் உள்ள இடத்தை ஒதுக்​கி​விட்டு 1,500 ஏக்கர் அளவுக்கு உத்தரவு முதல்​வ​ரால் வழங்​கப்​பட்​டது.

அதன்​பின் தற்போது 1,800 ஏக்கர் நிலத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. மீதமுள்ள நிலம் குறித்து ஆய்வு நடைபெறுகிறது. 3 மற்றும் 4-ம் வகை நிலங்களை பொறுத்​தவரை, வீட்டு​வசதி வாரியம்அந்த நிலத்​துக்கான தொகையை சில உரிமை​யாளர்களுக்கு வழங்கியுள்ளது.. பெறாதவர்​களுக்கு நீதி​மன்​றத்​தி​லும், வருவாய்த்​துறை​யிலும் டெபாசிட் செய்​யப்​பட்டுள்​ளது.

ஆனாலும், 40 ஆண்டு​களாக நடவடிக்கை எடுக்​காத​தால், உண்மை நிலையை கூறாமல் அந்த இடங்களை உரிமை​யாளர்கள் பலருக்கு விற்றுள்​ளனர். இதில் பிரச்​சினை இருக்​கிறது என்பதே தெரி​யாமல் அவர்கள் வாங்​கி​யுள்​ளனர். அவர்​களுக்​கும் பாதிப்​பின்றி நிலத்தை விடுவிக்க 2 ஓய்வு​பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்​கப்​பட்டு பணிகளை தொடங்​கி​யுள்​ளனர்.

ஏப்ரல் இறுதிக்​குள் பரிந்​துரைகள் பெறப்பட்டு அதன்​பின், நடவடிக்கை எடுக்கப்படும். ஐந்தாவது வகையை பொறுத்​தவரை, வீட்டு​வசதி வாரியம் முழு​மையாக நிலத்தை எடுத்து, அதில் ஒரு பகுதியை மேம்​பாடு செய்துள்ள நிலையில் மீதமுள்ள இடத்​தில் ஆக்கிரமிப்பு செய்​துள்ளனர். ஆக்கிரமித்​தவர்​களிடம் இடத்தை கோரு​வோம்.

அதில் அவர்கள் கட்டிடம் கட்டி​யிருக்​கும் பட்சத்தில், இன்றைய தேதி​யில் வாரியம் விற்​பதாக இருந்​தால் என்ன தொகை அந்த இடத்​துக்கு நிர்​ண​யிக்​கப்​படுமோ, அந்த தொகையை செலுத்தி எடுத்​துக் ​கொள்​ளலாம். அவர்​கள் ஆக்​கிரமிப்​பாளர்​கள் என்​ப​தால் எந்த சலுகையும் கிடை​யாது. வீட்டு​வசதி வாரிய இடங்​களில் தளப்​பரப்பு குறி​யீடு தொடர்பாக சீரமைப்பு நட​வடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.