பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியிருக்கிற `டிராகன்’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.
`லவ் டுடே’ திரைப்படத்திற்குப் பிறகு இளைஞர்களின் ஃபேவரிட் லிஸ்டில் இடம் பிடித்துவிட்டார் பிரதீப் ரங்கநாதன். அத்திரைப்படத்திற்குப் பிறகு இவர் நடித்திருக்கும் இந்த `டிராகன்’ திரைப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கிறார். `ஓ மை கடவுளே’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் அஸ்வத் மாரிமுத்து. `டிராகன்’ திரைப்படத்திற்காக இவர்கள் இருவரையும் சந்தித்துப் பேசினோம்.
“இப்போ காலேஜ் படிக்கும்போது எல்லோருக்கும் ஒரு பெயர் இருந்திருக்கும். நம்ம படிக்கும்போதும் ஒரு கெத்தான சீனியர் இருந்திருப்பாரு. காலேஜ்லையே பயங்கர லைம் லைட்டுல இருப்பாங்க. ஆனால், படிச்சு முடிச்சதும் அவங்க என்னவாக ஆனாங்கனு யாருக்கும் தெரியாது. அப்படி காலேஜ்ல இந்தக் கதாபாத்திரத்துக்குப் பெயர் டிராகன். அந்த பெயரை ஏன் வச்சோம்னு படத்தினுடைய முதல் நான்கு நிமிஷத்துல தெரிஞ்சுக்குவீங்க. இந்தப் படத்தலைப்பை ஏன் வச்சோம்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்குல. நிச்சயமாக தியேட்டர்ல அந்த பெயர் வச்சதுக்கான காட்சியை கொண்டாடுவீங்க.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/VS-YouTube-Mannerism-PradeepRanganathanDragonTeamInterview-24’51”.jpg)
`வழித்துணையே’ பாடல்ல வர்ற காட்சிகளெல்லாம் என் வாழ்க்கைல நடந்த விஷயங்கள்தான். ஆனால், நாங்க இப்போ ரிலேஷன்ஷிப்ல இல்ல. முன்னாடிலாம் நான் விளம்பர படங்கள், கார்ப்ரேட் வீடியோஸ் இயக்குவேன். அதையெல்லாம் இயக்கி முடிச்சதும் அதுல இருந்து கிடைக்கிற பணத்தை வச்சு என்னுடைய காதலியோட வெளிநாடுகளுக்குப் போயிடுவேன். கிட்டதட்ட 18 நாடுகளுக்குப் போயிருக்கேன். அந்த சமயத்துல பிரதீப் எனக்கு கால் பண்ணி `என்னப் பண்ணீட்டு இருக்கீங்க’னு கேட்டால்கூட `லவ் பண்ணீட்டு இருக்கேன்’னு சொல்லுவேன். என் வாழ்க்கைல அந்த பயணங்களெல்லாம் மறக்க முடியாத தருணங்கள். என் வாழ்க்கையில நடந்த தருணங்களையெல்லாம் பிரதீப்பை வச்சு சினிமாவுல திரும்ப பார்க்கிறேன்.
இந்தக் காட்சிகளை நான் வேணும்னு படத்துக்குள்ள வைக்கல. படத்துல இந்த விஷயங்கள் வைக்கிறதுக்கான இடங்கள் இருந்தது. இந்தப் பாடல் மாதிரி `கதைப்போமா’ பாடலுக்குப் பின்னாடியும் ஒரு சோகமான கதை இருக்கு.” என்றவர், “ எனக்கு வி.ஜே சித்து விலாக்ஸ் சேனல் ரொம்ப பிடிக்கும். அவங்க சேனலோட தொடக்க காலத்திலேயே நான் அவங்களை இந்தப் படத்துக்கு கமிட் பண்ணிட்டேன். அவங்களோட ஹைலைட் விஷயங்கள் எதையும் நான் படத்துல வைக்கல. அவங்களை இந்தப் படத்துல நீங்க நடிகர்களாக பார்ப்பீங்க. இதை தாண்டி படத்துல ஸ்நேகா மேம் கேமியோ பண்ணியிருக்காங்க.” என்றார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/VS-YouTube-Mannerism-PradeepRanganathanDragonTeamInterview-13’02”.jpg)
இவரை தொடர்ந்து நம்மிடையே பேசிய பிரதீப் ரங்கநாதன், “ படத்துல என்டர்டெயின்மென்ட் இருக்கணும்னு பார்த்து பார்த்து பண்ற விஷயங்கள்தான். ஆனால், அந்த என்டர்டெயின்மென்ட்னா காமெடி மட்டும் கிடையாது. படத்தை தியேட்டர்ல பார்க்கும்போது சில விஷயங்களுக்கு கத்துவாங்க. அப்படியான விஷயங்கள் இருக்கணும்னு நான் விரும்புவேன். டிரைலர்ல என்னுடைய ஸ்கூல் காட்சியில எனக்கு எதிர்ல நிற்கிற ஆள் ரவி மோகன் சார்னு சொல்றாங்க. ஆனால், அந்த கதாபாத்திரத்துல அவர் நடிக்கல.” என்றார்.