Ilaiyaraaja: "முழு ஈடுபாடும் இசையின் மீதே…" – 109 படங்களின் பாடல்கள் உரிமை வழக்கில் இளையராஜா

தேவர் மகன், குணா உள்ளிட்ட 109 படங்களின் பாடல்களின் உரிமை தொடர்பான வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இசையமைப்பாளர் இளையராஜா நேரில் ஆஜராகி ஒரு மணி நேரத்துக்கும் மேல் சாட்சியம் அளித்தார்.

முன்னதாக, தேவர் மகன், பாண்டியன், பிரம்மா, குணா உள்ளிட்ட 109 படங்களின் இசை வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ள மியூசிக் மாஸ்டர் இசை வெளியீட்டு நிறுவனம், தங்கள் அனுமதியின்றி இந்த படங்களின் பாடல்களை யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தத் தடைவிதிக்கக் கோரி 2010-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

சென்னை உயர் நீதிமன்றம்

இந்த வழக்கை நீதிபதி அப்துல் குத்தூஸ் விசாரித்த போது, 1997-ல் பாடல்கள் உரிமை வழங்குவது தொடர்பாக ஒப்பந்தம் செய்தபோது, யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை என்றும், ஆடியோ ரிலீஸ் ஒப்பந்தம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்தான், இளையராஜா இந்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காகச் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள மாஸ்டர் நீதிமன்ற நீதிபதி பி.இளங்கோ முன்பு இன்று ஆஜரானார். அப்போது, இளையராஜாவிடம் மூத்த வழக்கறிஞர் பி.ஆர்.ராமன் குறுக்கு விசாரணை மேற்கொண்டார். சாட்சி கூண்டில் நின்ற இளையராஜாவிடம், பாடல்களின் பதிப்புரிமை, தயாரிப்பாளர்களிடம் மேற்கொண்ட ஒப்பந்தம், சொத்து மதிப்புகள் தொடர்பாகக் கேள்விகள் கேட்கப்பட்டன.

இளையராஜா

அதில், தங்களிடம் எத்தனை பங்களாக்கள் இருக்கிறது என்று வழக்கறிஞர் எழுப்பிய கேள்விக்கு, “எனக்கு முழு ஈடுபாடும் இசையில் உள்ளதால், உலகளாவிய பொருள்களைப் பற்றி எனக்குத் தெரியாது” என்று இளையராஜா பதிலளித்தார். மேலும், “பெயர், புகழ், செல்வம் அனைத்தும் சினிமா மூலம் கிடைத்தது என்பது உண்மையா?” என்ற கேள்விக்கு, “அனைத்தும் சினிமா மூலம் கிடைத்தது” என்று இளையராஜா கூறினார்.

இளையராஜாவிடம் சுமார் ஒரு மணி நேரம் நடந்த சாட்சி விசாரணை முடிவில் நீதிபதி, வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி உத்தரவிட்டார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.