மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி தனியார் சொகுசு விடுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் குழுக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த விடுதியில் இதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக கட்சியின் பொதுச் செயலர் புஸ்ஸி என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மைக் குழு பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இந்த இடத்தில் பொதுக் குழுக் கூட்டத்தை நடத்தினால் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்து வரும் பொதுக் குழு உறுப்பினர்கள் சிரமமின்றி வர முடியுமா? எந்த இடத்தில் வாகனங்களை நிறுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசித்தனர்.
பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை, எந்த அரங்கில் கூட்டத்தை நடத்தலாம் என்பது குறித்தும் இந்த ஆய்வின்போது ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.