ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த அத்தாணியில் நேற்று முன்தினம் இரவு நடந்த அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசும்போது, “கடந்த தேர்தலில் துரோகிகளால் வெற்றியை இழந்தோம்” என்றார். இது அதிமுகவினரிடையே சர்ச்சையை கிளப்பியது,
இந்நிலையில், நேற்று காலை கோபி அருகே கள்ளிப்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில்பங்கேற்ற செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அந்தியூர் தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளோம். ஆனால், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சிலரின் துரோகத்தால் அதிமுக தோல்வியடைந்தது. துரோகம் என்ற வார்த்தை, அந்தியூர் தொகுதிக்கு மட்டுமே பொருந்தும். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் என்னைப் பற்றி பேசவில்லை என தெளிவாகக் கூறிவிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.